SWAMIYE SARANAM IYYAPPA...PANVEL BALAGANE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM....


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. நவராத்திரி நான்காம்நாளாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மிக்குரிய நாளாகும் .. அன்னையைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் ஐஸ்வர்யமிக்க 
நன்நாளாக மிளிர்ந்திட வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே !
விஷ்ணு பத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! 

இந்தப்பிரபஞ்சத்தின் தாயாக விளங்கும் அன்னையை வழிபடுவதற்குப் பலவழிகள் இருக்கின்றன .. அவளுக்கு
மிக .. மிகப் பிரியமான பெயரால் அன்னையை அழைப்பதுகூட ஒருவழிதான் .. அம்மா .. மா .. ஆயி .. ஆத்தாள் .. என்னும் பெயர்களே அவை .. அதேபொருள் கொண்ட மந்திரத்தாலும் வழிபடலாம் .. “ ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ “ 

இரண்டு யானைகள் இருபுறமும் துதிக்கையில் கலசம் ஏந்திப் போற்ற தாமரைமலரின்மீது வீற்றிருக்கிறாள் .. 
கஜம் என்றால் யானை என்று பொருள் .. 
இருபுறமும் யானைகள் கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வதைப்போல் அமர்ந்திருப்பதால் கஜலக்ஷ்மி என்ற பெயரும் அமைந்தது .. 

அன்னையைப் போற்றுவோம் .. அன்னையின் திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் பெறுவோமாக .. “ ஓம் சக்தி ஓம் “ 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY 
WITH THE BLESSINGS OF GODDESS LAXMI .. MAY SHE SHOWER YOU WITH PEACE .. HAPPINESS AND GOOD LUCK .. " JAI MATA DI "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. நவராத்திரி மூன்றாம் நாளாகிய இன்றும் அன்னை துர்க்காதேவியைப் போற்றி வணங்கி .. அன்னையின் அருட்கடாக்ஷ்மும் பெற்று அனைத்திலும் வெற்றி காண்போமாக .. ஓம் காத்யாயனாய வித்மஹே ! கன்யாகுமரீ ச தீமஹி ! தந்நோ துர்க்கி ப்ரசோதயாத் ! நவராத்திரி தோன்றிய கதை .. ஒருமுறை தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் கொடுத்து வந்த மஹிஷாசுரன் என்ற அரக்கனைக் கொல்ல சக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க .. சிவன் .. விஷ்ணு .. பிரம்மா .. ஆகிய முப்பெரும் தேவர்களும் முடிவு செய்தனர் மூன்றுகடவுள்களின் வாயிலிருந்தும் வெளிப்பட்டது ஒரு அற்புதமான பெண் உருவம் .. அதற்கு பத்து கைகள் .. ஆக்ரோஷமான முகம் கொண்டதாக இருந்து .. அந்தப் பெண் தெய்வம்தான் ‘ துர்க்கை ‘ .. சிவபெருமானின் துணைவி பார்வதிதேவியின் ஒருவடிவம்தான் துர்க்கை .. அன்னையிடம் அனைத்து கடவுள்களும் தங்களின் விருப்பமான ஆயுதங்களையும் .. கவசங்களையும் அளித்தனர் .. துர்க்காதேவி உலகையே அச்சுறுத்திவந்த மஹிஷாசுரனை வீழ்த்தியது தான் நவராத்திரியாகும் ! அன்னையைப் போற்றுவோம் ! அனைத்திலும் வெற்றிகாண்போமாக ! வெற்றி நிச்சயம் ! ” ஓம் சக்தி ஓம் ” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. MAY THIS DAY OF 'MAA DURGA' BE THE START OF YOUR GOOD LIFE .. GOOD FORTUNE .. AND LONG LASTING HAPPINESS .. JAI MATA DI ..

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM....PANVEL BALAGANE SARANAM IYYAPPA...



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. நவராத்திரி இரண்டாம் நாளாகிய இன்றும் அன்னை துர்க்கை அம்மனுக்கே உரிய நாளாகும் .. அன்னையைத் துதித்து இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாகவும் ..மனநலமும் .. உடல்நலமும் நலமே அமைந்திடப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் காத்யாயனாய வித்மஹே !
கன்யாகுமரீ ச தீமஹி !
தந்நோ துர்க்கி ப்ரசோதயாத் !! 

பதினெட்டு கரங்களுடன் பக்தர்களைப் பரவசப்படுத்துவதினால்
“அஷ்டாதசபுஜதுர்க்கை “ என்று போற்றி வணங்குகின்றனர் ..
அன்னையை ராகுகாலத்தில் வழிபடுவதினால் ”இராகுகாலதுர்க்கை” என துதிக்கின்றனர் .. 
சினம்கொண்டு சிவந்தகண்களுடன் .. சிவந்தமேனியுடன் திகழ்வதினால் “கெப்பம்மா துர்க்கை “ என்று வழிபடுகின்றனர்..
வீராவேசம் கொண்டு அரக்கர்களை அழித்து தேவர்களுக்கு அரணாக இருந்தமையால் “ கொற்றவை” என்றும் துதிக்கின்றனர் .. 
வலக்கையில் மழுவுடன் காட்சியளிக்கும் துர்க்கையை ”சிவதுர்க்கை” என்று வணங்குகின்றனர் .. 
இடக்கையில் சங்கும் .. வலக்கையில் மழுவுடன் காட்சியளிக்கும் துர்க்கையை “விஷ்ணு துர்க்கை” என வழிபடுகின்றனர் .. 
அன்னைக்கு உரியதிதி எட்டாம்நாளான அஷ்டமி திதியாகும் 
அதனாலேயே பக்தர்கள் ஸ்ரீதுர்க்காஷ்டமி என்றுகூறி சிறப்பாக வழிபடுகின்றனர் ..

அன்னையை பலநாமங்களில் அழைத்து மனம் உருகி வணங்கி வழிபட்டாலும் பக்தர்களுக்கு அன்னை பேரருளை வாரிவழங்கி 
வாழ்வளிக்கின்றாள் .. 

அன்னையைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோம் ! “ ஓம் சக்தி ஓம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY 'MAA DURGA' GUIDE YOU AND PROTECT YOU ALWAYS IN WHATEVER YOU DO .. AND WHEREVER YOU ARE .. MAY HER BLESSINGS REMOVE ALL THE OBSTACLES FROM YOUR PATH OF LIFE .. AS SHE REMOVES THE DARKNESS FROM THE UNIVERSE .. " HAPPY DURGA PUJA " .. JAI MATA DI ..

At ananthapadmanabhaswamy ambalam adyar golu


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் நவராத்திரிப்பண்டிகை நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக .. 
இன்று நவராத்திரி விழா (13.10.2015 ) ஆரம்பமாகின்றது .. நவராத்திரி முதலாம் நாளாகிய இன்று ஸ்ரீதுர்க்கைக்குரிய நாளாகும் .. அன்னையைப் போற்றி வணங்கும் சகலருக்கும் நல்லருள் தந்து பலவெற்றிகளைக் கொடுப்பதினால் 
“ ஜெயதுர்க்கை “ என்று போற்றுகின்றனர் .. 

இன்றைய நாள் தங்கள் அனைவருக்கும் ஓர் வெற்றிகரமான நன்னாளாகத் திகழ்ந்திட அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஐகிரி நந்தினி நந்தித மேதினி 
விஸ்வ வினோதினி நந்தனுதே !
கிரிவர விந்த்ய ஸிரோதி நிவாஸினி 
விஷ்ணு விலாசினி ஜிஸ்னுனுதே !
பகவதி ஹே ! ஸிதிகண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரிக்ருதே ! 
ஜய ! ஜய ஹே ! மஹிஷாசுரமர்தினி 
ரம்ய கபர்தினி ஷைலஸுதே !! 

இமவான் புத்ரியும் .. ஜடாமுடியுடன் திகழும் சிவபெருமானின் துணைவியும் .. மஹிஷாசுரனை சம்ஹரித்தவளுமான அன்னையே ! மஹிஷாசுரமர்தினியே ! உனக்கு வெற்றி தாயே!
உனக்கு அனந்தகோடி நமஸ்காரம் ! நம்மையும் காத்தருள்வாயாக !! 

தாயாக இருந்து உலகைக்காக்கும் அன்னையைச் சரணடைந்து
அனைத்திலும் வெற்றி காண்போம் ! வெற்றி நிச்சயம் ! 
” ஓம் சக்தி ஓம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED NAVARATRI AND MAY MAA DURGA EMPOWER YOU AND YOUR FAMILY 
WITH HER NINE SWAROOPA OF .. NAME .. FAME .. HEALTH .. WEALTH ..
HAPPINESS .. HUMANITY .. EDUCATION .. BAKTI .. AND SHAKTI .. 
" JAI MATA DI

நாளை ஆரம்பமாகும் நவராத்திரி பண்டிகைக்கு தங்கள் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களும் அன்னையின் ஆசியும் .. அருட்கடாக்ஷ்மும் பெற்று சீரும் .. சிறப்புடனும் வாழ வாழ்த்தி .. அன்னையை வணங்குகின்றோம் .. 

பூவுலகைக் காத்திடும் எல்லாம் வல்ல ஈசனுக்கு ஒருராத்திரி 
அதுவே சிவராத்திரி .. ஆனால் பரப்பிரம்மமான சக்திக்கு ஒன்பது ராத்திரிகள் .. அதுவே நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது .. 

நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம் .. உலகம் அனைத்தும் சக்திமயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம் .. 

பரப்பிரம்மத்தையே அன்னை பராசக்தி தன் அன்பினால் கட்டுப்படுத்தியுள்ளாள் என்பதை உலகைப்படைக்கும் பிரம்மாவையும் .. காக்கும் விஷ்ணுவையும் .. அழிக்கும் உருத்திரனையும் இவர்கட்கு மேலாகவிருக்கும் ஈஸ்வரனையும் தனக்குள் மறையும்படி செய்து மீண்டும் அவர்களை வெளிப்படுத்தி அவர்களது தத்துவார்த்தங்களை அவர்கள் மூலமாகவே வெளிப்படுத்துகிறாள் அன்னை .. 

பிரபஞ்சத்தில் பிறவி எடுத்த நாம் அனைவருமே அநித்யம் .. ஆனால் ஜெகதாம்பிகை ஒருவளே ! நித்திய யுவதி .. அவளைத் தூய்மையான உள்ளத்தோடு தியானித்து துதிசெய்தால் அருட்கடாக்ஷ்த்தை அள்ளி வழங்குவாள் .. அம்பிகை அருளைப்பெற .. அந்த மங்களநாயகியின் அம்சம் கலந்த மாதமான புரட்டாதியில் வரும் நவராத்திரியில் வணங்குவது 
மிகுந்த பலனை அளிக்கும் .. 

ஒருமனிதனின் வளர்ச்சிக்கு உடல் வலிமையும் வாழ்க்கைக்குத் தேவையான செல்வமும் .. அறிவும் .. வளமும் .. மிகவும் அவசியம் .. அதனை வெளிப்படுத்த உடல்வலிமையின் சக்தியாக ஸ்ரீதுர்க்காதேவியும் .. வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தை நல்கவல்ல சக்தியாக ஸ்ரீமஹாலக்ஷ்மியையும் .. அறிவையும் .. ஆற்றலையும் தரவல்ல கல்வியின் தேவதையாக ஸ்ரீசரஸ்வதிதேவியையும் .. நாம் வழிபட்டு அருள்பெற்று .. வலிமை .. செல்வம் .. கல்வி ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே 
நவராத்திரி விழாவாகும் ..
” ஓம் சக்தி ஓம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

NAVARATRI IS AN INDIAN FESTIVAL THAT HONORS THE DIVINE MOTHER IN HER VARIOUS FORMS .. NAVARATRI LITERALLY MEANS NINE NIGHTS .. 

THREE DAYS DEDICATED TO DURGA - THE GODDESS WHO HELPS US INTEGRATE THE EGO ..
THREE DAYS FOR LAKSHMI - THE GODDESS OF PROSPERITY AND 
ABUNDANCE ..
THREE DAYS FOR SARASWATI WHO BRINGS BEAUTY AND WISDOM .. 

THE FESTIVAL ENDS ON THE TENTH DAY WHICH IS THE DAY OF VICTORY .. WHEN GOOD TRIUMPHS OVER EVIL ..
MAY GODDESS 'MAA' BLESS YOU ALL .. " JAI MATA DI

BALAGARRING PARIPOORNA ARUL PALIKKUM DHARISANAM....SWAMIYE SARANAM IYYAPPA....PANVEL BALAGANE SARANAM IYYAPPA.....GURUVE SARANAM SARANAM



SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
திங்கட்கிழமையாகிய இன்று புரட்டாதிமாதத்தில் வரும் 
“ மஹாளய அமாவாசையாகும் “ நம்முன்னோர்கள் புண்ணியகாலமாகிய இன்று பூலோகம் வரும் மகிமைமிக்க நாளாகக் கருதப்படுகிறது .. அத்தோடு மஹாளயபக்ஷ்ம் இன்றோடு முடிவடைகின்றது
நமது மூதாதையர்களான பித்ருக்கள் தாம் நினைத்தபோதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது .. அமாவாசை .. மாதப்பிறப்பு .. இறந்த அவர்களது திதி .. மற்றும் மஹாளயபக்ஷ் தினங்களில்தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள் .. எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ருதர்ப்பண பூஜைகளை நிறைவேற்றிட அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக்கின்றனர் ..
பித்ருக்களின் உலகிற்குத் தலைவரான எமதர்மனின் சம்யமினீ என்ற அரசாங்கம் தெற்கில் உள்ளதால் பித்ருபூஜை தென்முகமாகச் செய்யப்படுகிறது ..
கங்கே ! தங்கேதி யோப் ரூயாத் யோஜநாநம் சாதரபி முச்யதே!
ஸர்வ பர்பேப்யோ விஷ்ணு லோகம் ஸகச்சதி !
பொருள் - கங்கை ! கங்கை ! என்று நூறுமைல்களுக்கு அப்பால் இருந்து சொல்பவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு அருளை அடைகிறான் என்று விஷ்ணுபுராணம் சொல்கிறது ..
நமதுமுன்னோர்களான மூன்றுதலைமுறைக்கும் சேர்த்து சிரார்த்தம் செய்யும்பொழுது பித்ருதேவதைகளின் பரிபூரண ஆசிகளும் .. சகலவிதமான சௌபாக்கியங்களும் கிட்டுவதோடு துன்பம் அணுகாமல் இன்பமாக வாழ அருள்வார்கள் ..
அவர்களது பரிபூரண ஆசியைப்பெற்று .. பாவதோஷங்கள் .. தடை .. தடங்கல்கள் நீங்கப்பெற்று சுபீட்சமான வாழ்வு வாழ்வோமாக .. “ பித்ரு தேவோ பவ “ ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED MONDAY .. TODAY IS THE ' MAHALAYA AMAVASYA DAY ' .. IT'S THE RIGHT TIME AS CONSIDERED BY MANY TO RESPECT THE DEPARTED SOULS .. IT SOLVES THE PROBLEMS RELATED TO HEALTH .. MONEY AND RELATIONSHIPS ..
EVEN IF THE ANCESTORS HAVE CURSES .. WE CAN RELIEVE THEM FROM BY OFFERING TO THE POOR .. IT PURIFIES THE MIND OF UNWANTED DEIRES AND BRINGS PROSPERITY AND LONFLIFE TO THE FAMILY .. " PITHRU DEVO BAVA " ..

THANGA JIGINA SIMHASANATHIL BALAGAR AMARNDHAR.....

SWAMIYE SARANAM IYYAPPA...PANVEL BALAGANE SARANAM IYYAPPA.....GURUVE SARANAM SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியாதிக்கம் பூமியில் நிறைந்த நாளாகும் .. சூரியபகவானைப் பிரார்த்தித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் சிறந்த ஆரோக்கியத்தையும் ..அறிவுத்திறனும் .. மற்றும் அனைத்து 
சம்பத்துக்களும் பெற்றிடவும் வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! 

“ ஆதித்யஹ்ருதயம் “ மகத்தான சக்திவாய்ந்த மந்திரம் .. இராவணனுடன் போரின்போது இராமபிரான் மனச்சோர்வுற்றபோது அகத்திய மாமுனிவர் இராமனுக்கு அருளிய உபதேச மந்திரமே இது .. சூரியனின் ஆற்றலை .. திறனைப் போற்றித் துதிக்கும் இதனை தினமும் பக்தியோடு பாராயணம் செய்துவந்தால் பகைகள் விலகும் .. தடைகள் நீங்கும் .. வேலை.. தொழில் முதலியவற்றில் இருக்கும் சிக்கல்கள் இல்லாமலாகும் .. 

ஜாதகத்தில் பித்ருதோஷம் உள்ளவர்கள் .. தந்தை ஸ்தானம் சரியில்லாதவர்கள் தினந்தோறும் பாராயணம் செய்துவந்தால் தோஷங்கள் குறையும் .. வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும் 
தலைமை பண்பு .. ஆளுமை திறன் .. புகழ் .. தந்தை .. தைரியம் மனோவலிமைக்கு சூரியனே அதிபதி .. 

சூரியனைப் போற்றுவோம் ! நலம் அனைத்தையும் பெற்றிடுவோம் ! ஓம் சூரியாய நமஹ ! வாழ்க வளமுடனும் ..
நலமுடனும் ..

Jothiswaroopane Saranam Ayyappa.....

Nilkanth Dham is a grand temple of Lord Shri Nilkanthvarnendra Swaminarayan, which is located on the beautiful river bank of Narmada at Poicha village of Narmada district,Gujarat..





Good morning to all Nandi at Chamundi Hills, Mysore, Karnataka

PANVEL BALAGANE POTRI POTRI....SWAMIYE SARANAM IYYAPPA.....SATGURUNATHANE SARANAM IYYAPPA...

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
சனிக்கிழமையாகிய இன்று புரட்டாதி நான்காம் வாரமும் .. ‘சனிப்பிரதோஷமும் ‘ சேர்ந்து வருவது சாலச்சிறந்ததாகும் .. காலையில் சிவாலயம் சென்று சனீஸ்வரரையும் .. மாலையில் ( 4.30 - 6.00 மணிவரையிலான ) பிரதோஷ வேளையில் ஈஸ்வரனையும் தரிசிப்பது அதிவிசேஷமாகும் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி புத்துணர்வுடன் திகழவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் சதாசிவாய வித்மஹே !
ஜடாதாராய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! 

தோஷம் என்றால் குற்றமுடையது .. அதேநேரம் பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள் .. எனவே குற்றமற்ற இந்தப்பொழுதில் ( மாலை 4.30 - 6.00 மணிவரை ) இறைவனையும் .. நந்தீஸ்வரரையும் வழிபடுவதால் சகல தோஷங்களும் நீங்கும் .. 

(மீனாட்சி ஸுந்தரேஷ்வர ஹாலாஸ்ய நாத ஸ்தோத்திரம்) -

பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய காலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய பூதேஸ்வராய புவனத்ரய காரணாயஹலாஸ்ய
மத்யநிலயாய நமஸ்ஸிவாய .. 

பொருள் - மக்களுடைய மனக்கவலையைப் போக்கி அருள்பவரே ! மீனாட்சிசுந்தரேஸ்வரா !
நமஸ்காரம் ! பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே!
பிரளயகால மேகம் போன்ற அருட்திரட்சி கொண்டவரே ! 
பிரதமகணங்களுக்கு ஈஷ்வரரானவரே ! மூவுலகங்களையும் படைத்தவரே ! காலகூட விஷத்தை அருந்தியதன் அடையாளமான கழுத்தை உடையவரே !ஹாலாஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே ! மீனாட்சிசுந்தரேஸ்வரா ! நமஸ்காரம் ! 

சனிப்பிரதோஷங்களில் இத்துதியை பாராயணம் செய்தால் சிவ அபசாரம் நீங்கி சகலமங்களங்களும் பெருகும் .. 
“ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..

Good Morning to all Trikoteshwara Swamy Temple in Kotappakonda,a holy hill, situated in Guntur district, Andhra Pradesh,

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...PANVEL BALAGANE SARANAM IYYAPPA...


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று ஆலயம் சென்று அன்னை மஹாலக்ஷ்மியைத் தரிசனம் செய்வது சாலச்சிறந்தது .. 
தங்களனைவருக்கும் அன்னையின் திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் கிடைத்து .. மகிழ்ச்சிகரமாக வாழ வாழ்த்துகிறேன் .. அன்னையை வணங்குகின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே !
ஸர்வசக்த்யை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !! 

பொருள் - மஹாசக்தியாகவும் .. உயிர்களை உய்விப்பவளாகவும் .. நம்மை நடத்திச் செல்பவளாகவும் உள்ள
தேவி எங்களைக் காத்திடட்டும் .. எங்கள் செயல்கள் யாவும் அன்னை அவளே ஊக்குவிக்கட்டும் .. 

செல்வ வளம்தந்து வறுமையை அகற்றி அருள்புரிபவள் .. பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும் அஷ்டதிக்கு கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன் அன்னைக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன .. யானையின் பிளிறலை லக்ஷ்மி விரும்பிக்கேட்கிறாள் என வேதமந்திரமான ஸ்ரீசூக்தம் கூறுகிறது .. 

விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள் .. லக்ஷ்மம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள் .. விஷ்ணுபகவான் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மஹாலக்ஷ்மியாகும் .. 

மங்காத புகழையும் .. நிறைவான செல்வத்தையும் .. சர்வமங்களங்களையும் அளித்திடும் அன்னையைப் போற்றுவோம் ! அனைத்தையும் பெற்றிடுவோமாக ! 
ஓம் ! சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAXMI .. MAY SHE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY .. 
" OM SHAKTHI OM " .. JAI MATA DI ..