PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: படியேற்றும் பணியில் மத்திய போலீஸ்!
டிசம்பர் 03,2013
Temple images
சபரிமலை: பக்தர்கள் கூட்டம் அதிகமானதால், 18ம் படியில், பக்தர்களை ஏற்றும் பணியில், மத்திய ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். சபரிமலையில், நேற்று காலை, சீராக இருந்த கூட்டம், மதியத்துக்கு பின், அதிகரித்தது. பம்பையில், "பார்க்கிங் இடம் நிரம்பியதால், சிறிய வாகனங்களும், நிலக்கல்லுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. பம்பையில், மணல் பரப்பில், பக்தர்கள், வடம் கட்டி தடுத்து நிறுத்தப்பட்டு, பின், சன்னிதானத்துக்கு அனுப்பப்பட்டனர். கூட்டம் அதிகமானதால், நேற்று மாலை, 4:00 மணிக்கு பதில், 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 18ம் படியேற, வரிசை, சரங்குத்தியை தாண்டி, மரக்கூட்டம் வரை காணப்பட்டது. இதனால், 18ம் படியில், மேலும் அதிகமான பக்தர்களை, விரைவாக ஏற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், முதன் முறையாக, மத்திய ஆயுதப்படை போலீசார் படியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள், படியின் இருபுறமும் நின்று, பக்தர்களை வேகமாக ஏற்றி விட்டனர்.

No comments:

Post a Comment