மகா சிவராத்திரி வழிபாடுக்கு 50 குறிப்புகள்

மகா சிவராத்திரி வழிபாடுக்கு 50 குறிப்புகள்
1. சிவனுக்கான ராத்திரியே சிவராத்திரி. அன்று நாம் அனைவரும் அவசியம் சிவனை வழிபட்டு அருள் பெற வேண்டும்.

2. நாளை (27ந் தேதி) காலை முதல் நாளை மறு நாள் (28-ந் தேதி) அதிகாலை சூரிய உதயம் வரை உள்ள காலமே சிவராத்திரி எனப்படுகிறது. 

3. கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான், லிங்க வடிவில் மகாலிங்கமாக இன்று தான் முதன் முதலில் தோன்றினார் என்று நாரத புராணம் சொல்கிறது. 

4. ஜோதிப்பிழம்பாக திகழ்ந்த சிவபெருமானின் அடியும், முடியும் காண முடியாமல் பிரம்மாவும், விஷ்ணுவும் திகைத்து நின்ற நாள். 

5. "நமசிவாய'' எனும் சிவபஞ்சாட்சர சொல்லை ஜெபம், ஹோமம் செய்து சித்தி பெற ஏற்ற நாள். 

6. நாளை நாம் ஒவ்வொரு வரும் சில விரதம் கடைபிடிக்க வேண்டும். 

7. சிவராத்திரியன்று கண்விழத்து, விரத நெறிப்படி பூஜைகள் செய்தால் அழிவற்ற செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். 

8. ஆண்டு தோறும் மகாசிவராத்திரி பூஜையை முறைப்படி செய்து வருபவர்களுக்கு சிவலோக மோட்சம் கிடைக்கும். 

9. மகாசிவராத்திரியான நாளை கண்டிப்பாக அருகில் உள்ள சிவாலயத்துக்கு சென்று வழிபடுங்கள். 

10. நாளை இரவு நடக்கும் 4 ஜாம பூஜைகளில் கலந்து கொள்வது மிக, மிக சிறப்பானது.

11. 4 கால பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பது புண்ணியத்தை அதிகரிக்கச் செய்யும். 

12. நாளை இரவு மண்ணாலான அகல் விளக்கில் பஞ்சு திரியிட்டு நெய் தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. 

13. நாளை இரவு சிவனின் மகிமையை விளக்கும் கதைகளை, உங்களுக்குத் தெரிந்து இருந்தாலும் மீண்டும் ஒரு தடவை படிக்கலாம். 

14. உண்மையான சிவபக்தர்கள் நாளை உபவாசம், பூஜை, தூங்காமல் கண் விழித்தல் ஆகிய மூன்றையும் நிச்சயம் செய்வார்கள். 

15. மகா சிவராத்திரியன்று முழுமையான சிவ சிந்தனையில் இருப்பவர்களுக்கு தெளிவான ஞானமும், நற்கதியும் உண்டாகும். 

16. நாளை மறு நாள் (28-ந் தேதி) காலை நித்ய பூஜை செய்து, தம்பதி பூஜை நடத்தி, ஏழைகள், சிவனடியார்களுக்கு அன்னதானம் கொடுத்த பிறகே உபவாசத்தை பூர்த்தி செய்தல் வேண்டும். 

17. வீட்டில் சிவராத்திரி பூஜை செய்பவர்கள் சிவனுக்கு, ஒவ்வொரு ஜாமத்துக்கும் உரிய மலர்களை சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை, ஈசன் படம் மீது போட்டு வழிபடலாம். 

18. நாளை இரவு முதல் ஜாம பூஜையை மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடத்தவும். 

19. இரண்டாம் ஜாம பூஜையை இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடத்தவும். 

20. மூன்றாம் ஜாம பூஜையை நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி நாளை மறு நாள் அதிகாலை 3 மணி வரை நடத்தவும் 

21. நான்காம் ஜாம பூஜையை நாளை மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தொடங்கி அதிகாலை 6 மணிக்குள் முடிக்கவும் 

22. முதல் ஜாமத்தில் சோமாஸ்கந்தர், 2-ம் ஜாமத்தில் தெட்சிணாமூர்த்தி, 3-ம் ஜாமத்தில் லிங்கோத்பவர், 4-ம் ஜாமத்தில் சந்திரசேகரையும் வழிபடுவது நல்லது. 

23. சூரின் அஸ்தமிக்கிற நேரத்தில் திரியோதசி திதி முடிந்து சதுர்தசி தொடங்கி மறுநாள் மாலை வரை அந்த திதி இருந்தால் அதுவே உத்தம சிவராத்திரியாகும். 

24. மகாசிவராத்திரியன்று பல சிவாலயங்களுக்கு சென்று வழிப்பட்டால் ஆத்மா சுத்தம் உண்டாகும். 

25. சிவராத்திரியன்று வீட்டில் பூஜை செய்யும் போது "ஓம் ஹாம் சிவாயநம'' என்று 3 தடவை சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். 

26. சிவராத்திரியன்று சிவாலயத்தை சுற்றி வரும் போது, சிவநாமங்களை உச்சரித்து கொண்டே செல்ல வேண்டும். 

27. சிவ நாமங்களில், "ஓம் ஸ்ரீ வைத்தீஸ் வராய நம, ஓம் பிரகதீஸ்வராய நம, கபாலீஸ்வராய நம, ஓம் வெள்ளீஸ்வராய நம, ஓம் மல்லீஸ் வராய நம, ஓம் முனீஸ்வராய நம, ஓம் விஸ்வேஸ்வராய நம, ஓம் சரபேஸ்வராய நம, ஓம் விருபாட்சஸ் வராய நம, ஓம் அக்னீஸ்வராய நம, ஓம் சோமமேஸ்வராய நம, ஓம் கும்பேஸ்வராய நம, ஓம் சர்வேஸ்வராய நம, ஓம் நந்தி கேஸ்வராய நம, ஓம் சதாசிவாய நம, ஓம் சாம்ப பரமேஸ்வராய நம என்று 16 நாமங்களை சொல்வது உயர்ந்தது. 

28. சிவ பெருமானை நாளை முறைப்படி வழிபட்டால், இம்மை மறுபை பலன்களை எளிதில் பெறலாம். 

29. சிவராத்திரியோடு தொடர்புடைய தலங்களில் நாளை வழிபாடு செய்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம். 

30. திருவிடை மருதூரில் உள்ள ஸ்ரீமகாலிங்க சுவாமி ஒரு சிவராத்திரி தினத்தன்று ஜோதி ரூபமாக வெளிபட்டு ருத்திரர்களுக்கு அருளினார். 

31. திருக்கழுக்குன்றத்தில் ஒரு மகா சிவராத்திரியன்று கோடி ருத்ரர்கள் பூஜித்து பலன் பெற்றனர். எனவே இத்தலம் ருத்திரக்கோடி என்று அழைக்கப்படுகிறது. 

32. பிரம்மனும், விஷ்ணுவும் அடிமுடி தேடிய போது சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி கொடுத்தார். எனவே இத்தலத்தில் நம் ஜாமத்தில் சிவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும். 

33. சிவராத்திரியன்று திருக்கடைïரில் வழிபாடுகள் செய்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும். 

34. மகா சிவராத்திரியன்று காளஹஸ்தியில் சுவாமியுடன் கிரிவலம் வருவது மிகுந்த புண்ணியப் பலன்களைத் தேடித்தரும். 

35. மதுரையில் உள்ள இம்மையில் நன்மை தருவார் கோவிலில் மகாசிவராத்திரியன்று சிவநாமம் சொல்லியபடி 108 தடவை பிரகாரத்தை வலம் வந்தால் தோஷங்கள் விலகும். 

36. சிதம்பரம் அருகில் உள்ள ஓமாம்புலிïர் தலத்தில் சிவராத்திரி அன்று வழிபடுவதும் சிறப்பானதாக கருதப்படுகிறது. 

37. சிவராத்திரியின் மகிமையை ஒரு வேடனுக்கு சொல்லப்பட்ட திருவைகாவூரில் சிவராத்திரியன்று வழிபட்டால், சிவராத்திரியின் மகிமை நிரந்தரமாக நம்மோடு சேர்ந்து விடும். 

38. சிவபெருமானை செண்பகம், தாழை ஆகிய இரு மலர்கள் தவிர மற்ற மலர்களால் அர்ச்சித்து பூஜை செய்யலாம். 

39. சிவபெருமானுக்கு மஞ்சள் பொடி கலக்காத, முனை உடையாத ஸ்வேத அட்சதை கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், எல்லா செல்வமும் கிடைக்கும். 

40. சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்யும் போது, வில்லவப் பழம் வைத்து ஆராதனை செய்தால் நமது பூஜைக்கான முழு பலன்களும் கிடைக்கும். 

41. திருவான்மிïரில் உள்ள மருந்தீஸ்வரரை சிவராத்திரியன்று வழிபட்டால் நாள்பட்ட நோய்கள் உடனே குணமாகும். 

42. மகாசிவராத்திரியன்று ஒரே நாளில் திட்டை வசிஷ்டேஸ்வரர், தேராயன் பேட்டை ஸ்ரீமச்ச புரிஸ்வரர், பாபநாசம் 1078 சிவாலயம், திருவைக்காவூர் ஸ்ரீவில்வனேஸ்வரர் ஆகிய 4 ஆலயங்களையும் வழிபடுவது அளவற்ற நற்பலன்களைத் தரும். 

43. சிவராத்திரியன்று சரபரை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கும். 

44. சிவபெருமானை நாளை 19 வகை அபிஷேகங்கள் செய்து வழிபடலாம். 

45. சிவபெருமானை நாம் நாளை எந்த அளவுக்கு வில்வத்தால் அபிஷேக, ஆராதனை செய்கிறோமோ அந்த அளவுக்கு ஈசன் மனம் குளிர்ந்து நமக்கு அருள்வார். 

46. ஒரு தடவை பயன்படுத்திய வில்வ இலைகளை நன்கு கழுவிவிட்டு, மீண்டும், மீண்டும் ஐந்து தடவை சிவ பூஜைக்கு பயன்படுத்தலாம். 

47. நாளை காலை தொடங்கி நாளை மறு நாள் அதிகாலை வரை சிவ சிந்தனையில் சிவ பூஜைகள் செய்தால் பிறவி பெருங்கடலை எளிதில் கடக்கலாம் 

48. பதினாறு பட்டைகளுடன் கூடிய லிங்கம் கோடஷலிங்கம் எனப்படும். இந்த லிங்கத்தை சிவராத்திரியன்று வழிபட்டால் 16 வகை பேறுகளும் கிடைக்கும் 

49. நாளை நாம் செய்யும் சிவ வழிபாடு எல்லா நன்மைகளையும் தந்து இறுதியில் முக்தியையும் தரவல்லது. 

50. நாளை மகாசிவராத்திரி விரதம் இருப்பதோடு, சிவாலயங்களுக்கு பொருள் உதவி செய்தால், நூறு ஏகாதசி விரதம் இருந்த பலன் கிடைக்கும். அதோடு சிவனருளும் சேர்ந்து வரும் என்று சிவாகமம் கூறுகிறது.

No comments:

Post a Comment