ராகு பகவான் உண்டாகக் கூடிய பலன்கள், பிரச்சனைகள்
ராகு பகவான் ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்றால் முன் கோபம் அதிகமிருக்கும். அன்னியப் பெண்களிடம் சுகம் பெறும் அற்ப புத்தியிருக்கும். நல்ல உணவு உண்ணும் பழக்கம் உண்டாகும். பல ஊர்களுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டும். வாத நோய் ஏற்படும். 

* ராகு 2-ல் இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமையின்மை, கண், வாய் போன்றவற்றில் பாதிப்பு உண்டாகும். 

* ராகு 3-ல் இருந்தால் சகோதர தோஷம் ஏற்படும்,. நீண்ட ஆயுள் உண்டாகும். நல்ல திறமையும் தைரியமும் கொடுக்கும். பல பெண்களின் தொடர்பு உண்டாகும். 

* ராகு 4-ல் இருந் தால் தாய்க்கு தோஷம் கல்வியில் தடை, சொத்துக் கனால் பிரச்சினை, முன்கோபம் உண்டாகும்.  

* ராகு 5-ல் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும்.தத்துப்புத்திர யோகம் உண்டாகும். முன் கோபமும் எதிரிகளை பந்தாடும் வலிமையும் உண்டாகும். ஒழுக்கம் நிறைந்திருக்கும் உற்றார் உறவினர்களிடையே பகை ஏற்படும். 

* ராகு 6-ல் இருந்தால் ரகசிய உறுப்பில் நோய் ஏற்படும். தன்னை நம்பியவர்களை அன்புடன் ஆதரிப்பர். 

* ராகு 7-ல் இருந்தால் வாழ்க்கைத் துணைக்கு ஆயுள் குறையும். விதவையின் தொடர்பு, முன்கோபம், எப்போதும் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். 

* ராகு 8-ல் இருந்தால் இல்வாழ்வில் நிம்மதி குறைவு. கண்டம், நாகதோஷம், ரகசிய உறுப்பில் நோய் உண்டாகும். மேடைப் பேச்சில் வல்லவராக இருப்பர். 

* ராகு 9-ல் இருந்தால் தந்தைக்கு தோஷம் ஏற்படும் செல்வம், செல்வாக்கு சேரும். பெண் என்றால் புத்திர தோஷமும் உண்டாகும். வெளிïர், வெளி நாடுகளுக்குச் செல்லும் யோகம் ஏற்படும். 

* ராகு 10-ல் இருந்தால் தொழில், உத்தியோகத்தில் சிறிது தடைகள் உண்டாகும். அனைவரிடமும் அன்பாக நடந்துகொள்வர். 

* ராகு 11-ல் இருந்தால் நீண்ட ஆயுள், திடீர் தனச் சேர்க்கை, விதவையின் தொடர்பு உண்டாகும். 

* ராகு 12-ல் இருந்தால் விரயம், உழைப்பால் உயர்வு, புண்ணிய காரியங்களுக்கு செலவு செய்தல் போன்றவை ஏற்படும். அடிக்கடி வெளியூர், வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

No comments:

Post a Comment