PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

வருகிற 13–ந்தேதி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா குருபக்வான் மிதுனராசியில் இருந்து கடகராசிக்கு பிரவேசிக்கிறார்


தனி சன்னதியில் குருபகவான் 

நவக்கிரங்களில் மகத்தான சுபபலம் பெற்றவர் குருபகவான். ஒருவரது ஜாதகத்தில் மிக கடுமையான பாவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தினால் கட்டுப்படுத்தும் சக்தி குருபகவானுக்கு உண்டு. எனவே குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி உண்டாயிற்று. இந்த குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம். இதனால் அவரவர் ராசிக்கு ஏற்ப பலன்கள் ஏற்படும்.

எல்லா சிவாலயங்களிலும் தென்கோஷ்டத்தில் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியே குருவாக பாவித்து வழிபடப்படுகிறார். ஆனால் தஞ்சை மாவட்டம் திட்டை கிராமத்தில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சன்னதியில் நவக்கிரக குருபகவானே தனி விமானத்துடன் ராஜகுருவாக நின்றகோலத்தில் அருள்பாலித்து வருகிறார். இத்தகைய அமைப்பு உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லை. ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல தலங்கள் பிரளயகால வெள்ளத்தில் மூழ்கி பின் தோன்றின. ஆனால் அந்த பேரழிவுக்காலத்திலும் அழியாத பெருமை உடையது திட்டை தலம். கைலாசம், கேதாரம், காசி, ஸ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்பு தலங்களின் வரிசையில் 22–வது சுயம்புதலமாக விளங்குவது திட்டையாகும்.

13–ந்தேதி குருபெயர்ச்சி 

ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குருபகவான் வருகிற 13–ந்தேதி(வெள்ளிக்கிழமை) மிதுனராசியில் இருந்து கடகராசிக்கு பிரவேசிக்க இருக்கிறார். இந்த குருபெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிக்காரர்களும் பலன்பெற வேண்டி லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ளது. ஒருவருடைய ஜென்ம ராசியில் இருந்து 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும்போது குருபகவான் நற்பலன்களை அளிப்பார் என்பது பொதுவிதி. அதன்படி இந்த குருபெயர்ச்சியின்போது 2–ம் இடத்திற்கு வருவதால் மிதுனராசிக்காரர்களுக்கும், 5–ம் இடத்திற்கு வருவதால் மீனராசிக்காரர்களுக்கும், 7–ம் இடத்திற்கு வருவதால் மகரராசிக்காரர்களுக்கும், 9–ம் இடத்திற்கு வருவதால் விருச்சகராசிக்காரர்களுக்கும், 11–ம் இடத்திற்கு வருவதால் கன்னிராசிக்காரர்களுக்கும் குருபகவான் நற்பலன்களை வழங்குவார்.

ஜென்மராசியான 1–ம் இடம் மற்றும் 3, 4, 6, 8, 10, 12 ஆகிய இடத்தில் குருபகவான் சஞ்சாரம் நற்பலன்களை அளிக்காது என்பது பொதுவிதியாகும். அதன்படி ஜென்மராசியான 1–ம் இடத்திற்கு வருவதால் கடகராசியில் பிறந்தவர்களும், 3–ம் இடத்திற்கு வருவதால் ரிஷபராசியில் பிறந்தவர்களும், 4–ம் இடத்திற்கு வருவதால் மேஷராசியில் பிறந்தவர்களும், 6–ம் இடத்திற்கு வருவதால் கும்பராசியில் பிறந்தவர்களும், 8–ம் இடத்திற்கு வருவதால் தனுசுராசியில் பிறந்தவர்களும், 10–ம் இடத்திற்கு வருவதால் துலாம்ராசியில் பிறந்தவர்களும், 12–ம் இடத்திற்கு வருவதால் சிம்மராசியில் பிறந்தவர்களும் குருபகவானுக்கு பரிகாரம் செய்து கொள்வது அவசியம் ஆகும்.

No comments:

Post a Comment