PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சிலர் கோயிலுக்கு செல்கிறார்கள். வரிசையில் நிற்கிறார்கள். கருவறையில் மூலவரைக்கண்டவுடன் வழிபாடு என்ற பெயரில் கண்களை மூடிக்கொள்கிறார்கள். சூட தீபாரதனை காட்டினால் கூட தெரியாத அளவிற்கு கண்களை மூடி நின்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்யலாமா? இப்படி செய்வது இறைவழிபாடு ஆகாது. கோயிலில் உள்ள மூலவரைக்கண்டவுடன் ஒரு நொடி கூட வீணாக்காமல் மூலவரை வைத்தகண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்யுங்கள். இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுங்கள். இறைவனின் ஆடை அணிகலனை ரசியுங்கள். அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள். ஏனென்றால், நீங்கள் மூலவர் முன் செல்லும் போது சில சமயம் திடீரென அபிஷேகத்திற்காக திரை போட்டு விடலாம். அல்லது அர்ச்சகர் மூலவரை மறைத்து விடலாம். எனவே கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே இறைவா! உனது தரிசனத்தை சிறப்பான முறையில் எனக்கு கிடைக்க அருள்புரிவாய். நான் உன்னை தரிசிக்க முடியாவிட்டாலும் கூட நீ என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாய். உனது கடைக்கண்பார்வை என்மீது விழட்டும் என மனதார பிரார்த்தனை செய்து கொண்டே இறைவனை காண செல்லுங்கள். இறைவனிடம் வேண்டுவதற்கு ஒன்றுமில்லை. நம்மைப்படைத்த இறைவனுக்கு நமக்கு எது தேவை என்பதும் தெரியும். எனவே இறைவனிடம் கண் மூடி வேண்டுவதை விட்டு விட்டு, கண்திறந்து பார்த்து தரிசியுங்கள். அழகில் மயங்குங்கள். அத்துடன் இறைவா! என்னை நீ தான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய். எனக்கு எது தேவையோ அதைக்கொடு. எது தேவையில்லையோ அதை நீக்கிவிடு என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள். மேலும் இறைவா! நீ என் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்திருந்து அருள் ஆட்சி செய்வாய் என வேண்டி இறைவனை இல்லத்தில் எழுந்தருள செய்யுங்கள். பின்னர் தினசரி பூஜையின் போது, கோயிலில் தரிசித்த இறைவனின் திருவுருவத்தை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்வது தான் உண்மையான வழிபாடு ஆகும்.

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ஆடிப்பூர நன்னாள் .. சிவாலயங்களிலும் .. விஷ்ணு ஆலயங்களிலும் .. அம்மன் ஆலயங்களிலும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது .. அனைத்து உலகத்தையும் படைத்தும் .. காத்தும் .. கரந்தும் விளையாடும் அகிலாண்டகோடி அன்னைக்கு மஞ்சள்காப்பு .. சந்தனக்காப்பு குங்குமக்காப்பு நடத்துவார்கள் .. அந்த அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகிக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம் .. பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம் .. அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள் .. அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்களை பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன .. இன்றுதான் பெரியாழ்வாரின் வீட்டில் ஆண்டாள் அவதரித்தாள் .. ஆண்டாள் தன் அளப்பரிய பக்தியால் திருமாலை கரம்பிடித்து சூடிக் கொடுத்த சுடர்கொடியானாள் .. இந்த நன்னாளில் அம்மன் ஆலயங்களுக்குச் சென்று வழிபட நம் துன்பங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும் என்பது மரபு .

It is our devout duty as a human on this good earth to protect and defend every cow, woman, girl, and the female being of all species ~ everywhere. In the Rig Veda, the Cow is described as Sabardudha ~ the provider of amrita, nurturance and wealth. Of all species, the cow is the primary example of unconditional love, forgiveness, patience, courage, endurance, fearlessness, confidence, faith, and serenity. In all cultures we hail “Mother” as the holiest. Practically everything that comes from the cow, weather milk or urine all is healing. Cow is believed to fulfill people’s wishes, be it their business, health, studies or anything else. If people start worshipping cow religiously all his desires will come true. This is a Mantra recited in praise of Gomata. "Sarvakaamdudhe devi sarvatithirbhishechini Pavane surbhi shreshte devi tubhyam namostute"

ஆடிக்கிருத்தியை முன்னிட்டு திருத்தணி முருகனுக்கு தங்க கவசம் அணிந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காட்சி.

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று ஆடிச்செவ்வாயும் .. ஏகாதசி விரதமும் சேர்ந்து வருகின்றது .. இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் துதித்து அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழ பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நாராயணாய வித்மஹே .. வாசுதேவாய தீமஹி .. தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU ..