PANVEL BALAGAR
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ஆடிப்பூர நன்னாள் .. சிவாலயங்களிலும் .. விஷ்ணு ஆலயங்களிலும் .. அம்மன் ஆலயங்களிலும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது .. அனைத்து உலகத்தையும் படைத்தும் .. காத்தும் .. கரந்தும் விளையாடும் அகிலாண்டகோடி அன்னைக்கு மஞ்சள்காப்பு .. சந்தனக்காப்பு குங்குமக்காப்பு நடத்துவார்கள் .. அந்த அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகிக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம் .. பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம் .. அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள் .. அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்களை பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன .. இன்றுதான் பெரியாழ்வாரின் வீட்டில் ஆண்டாள் அவதரித்தாள் .. ஆண்டாள் தன் அளப்பரிய பக்தியால் திருமாலை கரம்பிடித்து சூடிக் கொடுத்த சுடர்கொடியானாள் .. இந்த நன்னாளில் அம்மன் ஆலயங்களுக்குச் சென்று வழிபட நம் துன்பங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும் என்பது மரபு .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment