அதிஷ்டானத்தில் சங்கரரின் ஆதிக்கம் இருக்கின்றது - அங்கு
சென்று வணங்கிடும் அடியவர் உள்ளம் அமைதி அடைகின்றது
சுற்றி வருகையிலே மனதில் நல்லெண்ணம் பிறக்கின்றது
கை கூப்பி வேண்டிடவே மனமும் ஆவல் கொள்கின்றது
நம் கவலைகள் அவரிடம் சேர்ந்ததுமே தன வலுவை இழக்கின்றது 
எண்ணமும் அங்கே உடனே தூய்மை பெறுகின்றது
அற்புதம் செய்வது தான் குரு அவரின் மகிமை
அன்புடன் தினம் தோறும் அருள்வது அவர் பெருமை - 

No comments:

Post a Comment