அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ‘ மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம் ‘ .. ஸ்ரீவிநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்த போதிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிக மிக முக்கியமானது .. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தியாகும் .. சந்திரபகவான் தனது தோஷங்கள் நீங்கவும் .. தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீவிநாயகப் பெருமானை நினைத்து கடும் தவம் செய்ய சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார் .. தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது .. அந்த நன்னாளைத்தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபடுகிறோம் .. சங்கடம் என்றால் தொல்லைகள் .. கஷ்டங்கள் .. தடைகள் .. என்று அர்த்தம் .. ஹர என்றால் நீக்குவது என்று பொருள் .. விநாயகசதுர்த்திக்கு (ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தி) முன்னதாக வரும் இந்த சதுர்த்திக்கு மஹாசங்கடஹர சதுர்த்தி என்பர் .. விநாயகரைத் துதித்து தங்களனைவரது சங்கடங்கள் யாவும் பனிப்போல விலகிட பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத் புருஷாய வித்மஹே .. வக்ரதுண்டாய தீமஹி .. தந்நோ தந்தி ப்ரசோதயாத் .. .. .. .. 

No comments:

Post a Comment