அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கும் ‘ சங்கடஹர சதுர்த்தி விரதமும் ஆகும் ‘ .. விரதமிருந்து தங்கள் அனைவருக்கும் சங்கடங்கள் யாவும் பனிப்போல் நீங்கிட விக்னேஷ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் .. .. ஓம் தத் புருஷாய வித்மஹே .. வக்ரதுண்டாய தீமஹி .. தந்நோ தந்தி ப்ரசோதயாத் .. // .. பிள்ளையாரை வழிபட சங்கடஹர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றது .. பௌர்ணமியை அடுத்து நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளையே ” சங்கடஹர சதுர்த்தி“ என்பர் .. சங்கடங்களை அழிப்பதால் இப்பெயர் ஏற்பட்டது .. .. கர்வ மிகுதியால் பிள்ளையாரின் கோபத்துக்கு ஆளான சந்திரன் தன் உடலில் பொலிவிழந்து வருந்தினான் .. இறுதியில் பிள்ளையாரிடமே சரணடைந்தான் .. பிள்ளையார் அருள்புரிந்ததோடு சங்கடஹர சதுர்த்தியில் எம்மை நினைப்பவர் .. பூஜிப்பவர் யாவருக்கும் இன்னல்கள் நீங்கி அருள்புரிவேன் என்றருளினார் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A VERY HAPPY MORNING .. AND A BLESSED DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANAPATHY ..
No comments:
Post a Comment