PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று நவராத்திரி மூன்றாம் நாளாகும் .. அன்னை துர்க்காதேவியைத் துதித்து தங்களனைவருக்கும் சகலசௌபாக்கியங்களும் கிட்டிடப் பிரார்த்திக்கின்றேன் .. // அன்னை துர்க்காதேவியை பல்வேறு பெயர்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர் .. அன்னையைப் போற்றும் அனைவருக்கும் நல்லருள் தந்து வெற்றிகளைக் கொடுப்பதினால் ‘ ஜெய துர்க்கை ‘ என்று போற்றுகின்றனர் .. பதினெட்டு கரங்களுடன் பக்தர்களைப் பரவசப்படுத்துவதினால் ‘ அஷ்டாதசபுஜ துர்க்கை ‘ என்று போற்றி வணங்குகின்றனர் .. அன்னையை ராகுகாலத்தில் வழிபடுவதினால் ‘ இராகு கால துர்க்கை ‘ என துதிக்கின்றனர் .. சினம் கொண்டு சிவந்த கண்களுடன் .. சிவந்தமேனியுடன் திகழ்வதினால் ‘ கெப்பம்மா துர்க்கை ‘ என்று வழிபடுகின்றனர் .. வீராவேசம் கொண்டு அரக்கர்களை அழித்து .. தேவர்களுக்கு அரணாக இருந்தமையால் ‘ கொற்றவை ‘ என்றும் துதிக்கின்றனர் .. வலக்கையில் மழுவுடன் காட்சியளிக்கும் துர்க்கையை ‘சிவதுர்க்கை’ என்று வணங்குகின்றனர் .. இடக்கையில் சங்கும் வலக்கையில் சக்கரமும் கொண்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் துர்க்காதேவியை ‘விஷ்ணுதுர்க்கை’ என வழிபடுகின்றனர் .. அன்னையை பல நாமங்களில் அழைத்து மனம் உருகி வணங்கி வழிபட்டாலும் பக்தர்களுக்கு பேரருளை வழங்கி வாழ்வளிக்கின்றாள் .. ஓம் சக்திஓம் ! ஓம் சக்திஓம் ! ஓம்சக்திஓம் ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. .. // .. .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS DURGA ..

No comments:

Post a Comment