PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

1) எப்படி தூங்க வேண்டும்?

பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு.

வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது.

தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது.

இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும்,
தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும்.

அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது.

கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.

நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும்.

காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.

இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.

எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.

இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பதனால் அனேகம்பேர் அதனை விரும்புவதில்லை.

2) வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்?

ஆன்மீகம் - பூதம் தூக்கிப் போய்விடும்(குழந்தைகளுக்காக).

அறிவியல் - புறச் சுழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும்.

நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது இது மிக அதிகம்.

இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும் குன்றிவிடும்.

(உ.ம் - சூடான தோசைக் கல்லில் நீர் தெளித்தல்).

இதனால் இரத்தம் மற்றும் வெப்பம் சம்மந்தமான வியாதிகள் வரும்.

No comments:

Post a Comment