அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. நவராத்திரி ஒன்பதாம் நாளாகிய இன்று ‘மகிஷாசுரனை’ வதம் செய்த நாளாகும் .. அன்னையை மஹிஷாஸுரமர்தினி என்றழைப்பர் .. // .. அய்கிரி நந்தினி .. நந்திதமேதினி விஸ்வ வினோதினி நந்தனுதே ! கிரிவர விந்தய ஸிரோதி நிவாஸினி விஷ்ணு விலாசினி ஜிஸ்ணு நுதே ! பகவதி ஹே ! ஸிதிகண்டகுடும்பினி பூரிகுடும்பினி பூரிக்ருதே ! ஜய ஜயஹே! மஹிஷாசுரமர்தினி! ரம்ய கபர்தினி ஷைலஸுதே !!! .. .. இமவான் புத்ரியும் .. ஜடாமுடியுடன் திகழும் சிவபெருமானின் துணைவியும் மஹிஷாசுரனை சம்ஹரித்தவளுமான அன்னையே! மஹிஷாசுரமர்தினியே! உனக்கு வெற்றி தாயே! உனக்கு அனந்தகோடி நமஸ்காரம்! எங்களை காப்பாற்றுவாயாக! .. .. .. // .. மஹிஷாசுரன் கடும்தவம் புரிந்து பிரம்மதேவனிடம் பெற்ற தவவலிமையினால் அகந்தைமேலிட தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்துக்கொண்டிருந்த நேரம் அது .. மஹிஷாசுரனுக்கு ஒரு ஸ்திரியால் அன்றி மரணம் ஒருபோதும் ஏற்படக்கூடாது என்ற வரத்தினையும் .. சர்வலோகங்களையும் அரசாளும் வரத்தினையும் பெற்றிருந்தான் .. தன்னை அழிக்கும் தகுதி உள்ள ஒரு ஸ்திரி சர்வலோகங்களிலும் இல்லை என எண்ணி கர்வமும் .. அகங்காரமும் கொண்டான் .. அறிவு வேண்டாம் .. அறிவு நூல்கள் வேண்டாம் .. அறிவுக்கலைகள் வேண்டாம் .. இசைவேண்டாம் .. சிற்பம் .. சித்திரம் .. கோயில் .. கோபுரம் .. ஒன்றும் வேண்டாம் எல்லாவற்றையும் அழித்துப்போடுங்கள் என்று கட்டளையிட்டான் ..தேவர்கள் .. முனிவர்கள் .. மனித்ர்கள் எல்லோரும் நடுநடுங்கினர் .. அவர்களில் பலர் மஹிஷாசுரனுக்கு அடிபணிந்தனர் .. இவனிடம் தேவலோகத்தையும் .. சிம்மாசனத்தையும் பறிகொடுத்த இந்திரன் முதலான தேவர்கள் மும்மூர்த்திகளிடம் சென்று வணங்கி தமக்கு ஏற்பட்ட துயரிலிருந்து தம்மைக் காத்தருளவேண்டும் என இறைஞ்சி நின்றனர் .. சிவன்.. விஷ்ணு .. பிரம்மா மூவரின் சக்திகளினால் சகல அம்சங்களும் பொருந்திய ஒரு ‘சங்கார மூர்த்தியை’ சிருஷ்டித்தார்கள் .. சிவன் அதற்கு சக்தி கொடுக்க .. அதுவே முகமாகவும் .. பிரம்மாவின் சக்தி உடலாகவும் .. திருமால் கொடுத்த சக்தி பதினெட்டு கரங்களாகவும் .. எமதர்மனின் சக்தி கூந்தல் .. அக்னிபகவானின் சக்தி கண் .. மன்மதனின் சக்தி புருவம் .. குபேரனின் சக்தி மூக்கு .. முருகனின் சக்தி உதடு .. சந்திரனின் சக்தி தனங்கள் .. இந்திரனின் சக்தி இடை .. வருணனின் சக்தி கால் .. என அனைத்து சக்திகளும் இணைந்த சக்தியாக உருவெடுத்தாள் .. அதற்கு துர்க்காதேவி .. சண்டிகாதேவி .. காளிதேவி என நாமம் சூட்டி ஆசிகளும் வழங்கினர் .. துர்க்காதேவியும் மஹிஷாசுரனோடு போர் புரிந்து அவனை அழித்ததுடன் தேவர்கள் இழந்த தேவலோக சிம்மாசனத்தையும் பெற்றுக்கொடுத்து காத்தருளினாள் .. மஹிஷாசுரனை அழித்ததால் துர்க்காதேவி மஹிஷாசுரமர்தினி என்று பெயர் பெற்றாள் .. மஹிஷாசுர சங்காரம் சுலபமான ஒன்றல்ல .. அவனின் தலை கொய்யப்படும் பொழுது நிலத்தில் விழும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒவ்வொரு மஹிஷாசுரனாக உருவாகும் சக்திகொண்டது .. அதனால் துர்க்காதேவி ஒரு பாத்திரத்தில் அவன் இரத்தத்தை ஏந்தி அவை நிலத்தில் சிந்தாதவண்ணம் தானே அதை பருகி மஹிஷாசுரனின் சங்காரத்தை நிறைவு செய்தாள் .. // .. ஓம்சக்திஓம் .. ஓம்சக்திஓம் .. ஓம்சக்திஓம் .. MAY GODDESS DURGA'S BLESSINGA BE WITH YOU FOREVER .. OM SHAKTHI ..
PANVEL BALAGAR

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment