அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று  சீரடிபாபாவினதும் தினமும் ஆகும் .. அத்தோடு நேற்று 15.10.2014 அவரது சமாதிநாளும் ஆகும் .. அவரது பாதம் பணிந்து அனைவருக்கும் குருவின் அன்பும் .. பூரணமான திருவருளும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம்சாய் .. ஸ்ரீசாய் .. ஜெய ஜெய சாய் .. ஸாயிபாபா ஸர்வாந்தர் யாமி .. (எங்கும் வியாபித்திருப்பவர்) முற்றும் அறிந்த ப்ரஹ்மஞானி .. பஞ்சபிட்சகர் (ஒருநாளில் ஐந்து வீடுகளில் மட்டுமே பிட்சை வாங்குவார் என்பதால் இந்தப்பெயர்) நிரதாக்னி ஹோத்தரன் (ஷிர்டியில் அவரருகே துணி எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கின்ற காரணத்தால் அவரை இப்படியும் அழைப்பர்) அனைத்து சாஸ்திரங்களையும் கற்றறிந்தவர் .. தியானஸ்வரூபி .. அவரே பிரம்மா .. விஷ்ணு .. பரமேஸ்வரன் .. அப்படிப்பட்ட சாயிநாதரை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து நாம் வழிபடுவோமாக .. “ ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு சாயிநாத் மஹராஜ்கீ ஜெய் “ .. தேவர்களும் பிறப்பெடுக்க விரும்பும் மானிட பிறப்பில் செய்வதற்கு எத்தனையோ இருக்கின்றது .. இது தெரியாமல் மாயையில் திளைத்து பொறாமை .. கோபம் .. துவேஷம் .. உதாசீனப்படுத்துதல் .. போன்ற செயல்களில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம் .. புனரபி ஜனனம் - புனரபி மரணம் என்பது போல இந்த லோகத்தில் பிறப்பும் இறப்பதுமான சுழற்சி நடந்து கொண்டிருக்கின்றது .. இறப்பது .. மறுபடியும் பிறப்பதற்கா ? எதற்காக இந்த மனித ஜென்மம் எடுத்திருக்கிறோம் என்று கேட்கிறார் பாபா .. ஒருதடவை நிதானமாக யோசியுங்கள் .. நிரந்தரம் இல்லாத ஒருவிநாடி சந்தோஷத்திற்கு அடிமையாகி இருக்கிறோமே தவிர நிரந்தரமான சந்தோஷம் ஒன்றே இருக்கிறது என்பதை அறியவில்லை .. அதை முயற்சி செய்து அடைய இந்த மானிட ஜென்மத்தை உபயோகித்துக் கொண்டிருக்கிறோமா ..? .. க்ருதே ஜனார்த்தனோ த்ரேதாயாம் ரகு நந்தன த்வாபரே ராமகிருஷ்ணளச க்ளெ ஸ்ரீ ஸாயிநாத .. கருதயுகத்தில் சமதா (உள்ளம் .. உடல் .. இவற்றின் தனித்தன்மை) மூலமும் .. த்வாபரயுகத்தில் பூஜைபுறையிலும் தெய்வவழிபாடுகள் நடைபெற்றது .. தற்போது கலியுகத்தில் நாமஸ்மரனணை மட்டும் போதும் போதும் என்கிறார் சாயி .. நாமஸ்மரணையிலும் குணநாமஸ்மரணம் விசேஷம் .. யாருடைய நாமத்தை ஸ்மரணை செய்கிறோமோ அவர்களின் குணத்தையும் சேர்த்து பாராயனம் மூலம் கேட்பதினால் அதிக பலன் கிடைக்கிறது .. அதுமட்டுமல்லாமல் .. ஸத்ஸங்கத்துடன் இதை செய்யும்போது மனது பகவானுடன் ஐக்கியமாகிறது .. இதன்மூலமே முழுபலன் அடையமுடியும் அதனால்தான் கலியுகத்தில் நாமஸ்மரணை போதும் என்பது சாயிநாதரின் நோக்கம் .. அனைவருக்கும் நாதரான சாயிநாதரின் சரித்திரமான சாயி ஸத்சரித்திரத்தை இந்த சப்தாஹாவில் பாராயணம் செய்வது அவசியமாகிறது . கண்மூடித்தனமாக இல்லாமல் எனது பக்தர்களாக இருக்கிறீர்கள் என்பதை நினைத்து கவனத்தோடு மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டு எனது நாமத்தை ஸ்மரணை செய்தால் போதும் என்கிறார் பாபா .. அத்தோடு பாபா கூறிய மற்றோரு உன்னதமான விஷயம் .. பலவகையில் வழிதவறி ஓடும் மனதை அவர் மீது வைத்து கவலையில்லாமல் இருக்கும்படி கூறுகிறார் .. வழிதவறி மனதை பாபாவிற்கு அர்ப்பணம் செய்யவேண்டுமென்றால் முதலில் நம்மனதை நாமே கட்டுப்படுத்தி அதற்குபிறகு பகவானுக்கு அர்ப்பணம் செய்யவேண்டும் .. அவ்வாறு மனதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அது பூரணவிசுவாசத்துடன் செய்யப்படும் பூஜை .. பஜனை .. பாராயணம் .. ஸத்ஸங்கம் மூலமாக மட்டுமே முடியும் .. ஸத்ஸங்கத்வே நி ஸங்கத்வம் .. நி ஸங்கத்வே நிர்மோஹத்வம் .. நிர்மோஹத்வே நிச் சலத்யம் .. நிச் சலத்த்வே ஜீவன் முக்தி .. என்று ஆதிசங்கர் கூறினாரென்றால் ஸத் ஸங்கத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் .. அங்கு சொல்லப்படும் கருத்துக்களை கவனமாகக் கேட்டு நடந்தால் குருவின் திருவருள் பரிபூரணமாகக் கிட்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் .. வாழ்க வளமுடனும் . நலமுடனும் .. ..  MAY SHIRDI SAI BLESS YOU AND GUIDES YOU FOREVER ..

No comments:

Post a Comment