அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவருக்கும் அன்னையின அருட்கடாக்ஷ்ம் பெற்று மகிழ்ச்சிகரமாய் வாழ வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே ..சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே .. நமஸ்தே கருடாரூடே கோலாஸுரபயங்கரீ .. ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !!! .. .. அன்னை மஹாலக்ஷ்மி வில்வமரத்தில் வாசம் செய்கிறாள் .. வில்வத்தால் அர்ச்சனை செய்வதும் .. வில்வமரத்தைப் பேணுவதும் ஸ்ரீமஹாலக்ஷ்மிக்குப் பிரியமானதாகும் .. சூரியனைப் போன்ற ஒளியுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே உன்னருளால் உண்டாக்கிய “வனஸ்பதி” என்று புகழ் பெற்ற வில்வமரம் அதனுடைய பழம் எங்கள் மனதையும் புற இந்திரியங்களையும் பற்றியுள்ள அஞ்சானத்தையும் .. மங்களமற்றவற்றையும் நீக்கிவிடும் .. தாமரைமலர் ஸ்ரீமஹாலக்ஷ்மியுடன் பிறந்தவனான சந்திரனைக் கண்டதும் அவனை வெறுத்து இதழ்களைக் குவிக்கும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டது .. இதனைக்கண்ட அன்னை தாமரைமலரில் அதிகமாக வசிக்காது தன்னுடன் பிறந்த கௌத்துவமணிக்குப் பெருவாழ்வு கொடுக்க எண்ணி அதனை அணிகின்ற திருமாலின் மார்பில் நித்திய வசிப்பிடம் கொண்டாள் .. இதனால் மக்கள் .. உலகவர் .. உடன்பிறந்தோரை வெறுத்துச் சினங்காது நேசமாகவும் .. அந்நியோந்நிய உறவுடன் இருப்பதனையுமே ஸ்ரீமஹாலக்ஷ்மி அதிகம் விரும்பிப் பேரருள் புரிவாள் .. // .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

No comments:

Post a Comment