அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. கந்தசஷ்டி இறுதி நாளான இன்று பாரணைப்பூஜை முடிவுற்றதும் மாகேசுவர பூஜை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்வர் .. // .. உருவாய் அருவாய் உளதாய் இலதாய் .. மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் .. கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் .. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! “அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்ஜே குறி” .. சூரசம்ஹாரம் முடிந்து ஏழாம் நாளாகிய இன்று தெய்வானை திருக்கல்யாணம் நடக்கின்றது .. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார் என்றும் .. மேலும் இவர்களது திருமணம் முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாணம் நடந்தது எனக் கந்தபுராணம் கூறுகின்றது .. நாளை சுவாமி தெய்வானையுடன் வீதிவலம் வருவது மரபாகும் .. அதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும் .. ” வேலுண்டு வினைதீர்க்க .. மயில் உண்டு எமைக்காக்க “ .. ஆறிரு தடந்தோள் வாழ்க ! ஆறுமுகம் வாழ்க! வெற்பை கூறு செய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேள் ஏறிய மஞ்சை வாழ்க! யானைதன் அணங்கும் வாழ்க! மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சேர் அடியார் எல்லாம்! அனைவருக்கும் முருகனின் அருட்கடாக்ஷ்ம் கிடைத்து சகலசௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. சரணம் சரணம் சரவணபவ ஓம் .. சரணம் சரணம் சண்முகா சரணம் .. வாழ்க வளமுடனும் நலமுடனும் .. ..
No comments:
Post a Comment