அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதம் .. சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம் .. ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனைத் தரும் .. மாதந்தோறும் இருமுறை வளர்பிறை .. தேய்பிறை திரயோதசி நாட்கள் பிரதோஷ தினங்களாகும் .. இந்நாட்களில் மாலை 4.30 மணிமுதல் - 6.00 மணிவரையிலான நேரமே பிரதோஷ காலமாகும் .. இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி .. இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை .. நந்தீஸ்வரரையும் மறவாமல் வழிபட வேண்டும் .. தங்களனைவருக்கும் எல்லாவித தடைகளும் நீங்கி இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நாளாகவும் அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. ஓம் சிவாய நமஹ ..MAY THE DIVINE LORD SHIVA BLESS YOU .. AND GUIDES YOU IN EACH STEPS YOU TAKE .. HAVE A NICE DAY TOO ..
No comments:
Post a Comment