PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமுமாகும் .. எம்பெருமானைத் துதித்து தங்களனைவருக்கும் சகலதோஷங்களும் நீங்கி நன்மை உண்டாவதாக .. பிரதோஷ காலத்தில் (மாலை 4.30 - 6.00 மணிவரை)மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தீஸ்வரரின் இரு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க எல்லா நன்மைகளும் உண்டாகும் .. “ பிரதோஷம் எப்படி ஏற்பட்டது “ என்றால் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் மூண்டது .. இருபுறத்திலும் ஏறாளமானோர் மடிந்தனர் .. எனவே தேவர்கள் பிரம்மனை அணுகி சாகாமல் இருக்க என்ன வழி என கேட்டனர் .. அவர் தேவர்களை நாராயணனிடம் அழைத்துச் சென்று அமிர்தம் உண்டால் சாகாமலிருக்கலாம் என்று அவரும் யோசனை தெரிவித்தார் .. பாற்கடலை கடைந்தால் தான் அமிர்தம் எடுக்க முடியும் .. அசுரர்கள் தயவில்லாமல் பாற்கடலை கடைய முடியாது .. அவர்களை சேர்த்துக்கொண்டால் அசுரர்களுக்கும் பங்கு தர வேண்டும் .. வேறு வழியில்லாமல் அவர்களையும் துணைக்கழைத்துக் கொண்டனர் .. மேருமலையை மத்தாகவும் .. ஆயிரம் நாக்குடைய வாசுகியைக் கயிறாகவும் கொண்டு வால்பக்கம் தேவர்களும் .. தலைப்பக்கம் அசுரர்களும் பிடித்துக் கடைய ஆரம்பித்தனர் .. இவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் கடைந்தனர் .. இரண்டு பக்கத்தினரும் மாறி மாறி இழுத்ததால் வாசுகியின் உடல் புண்ணானது .. தன்னையும் அறியாமல் வலி பொறுக்காமல் ஆயிரம் வாயினாலும் விஷத்தைக் கக்கிவிட்டான் .. அச்சமயத்தில் கடலில் இருந்த விஷம் பொங்கியது இப்படி பாம்பினால் கக்கப்பட்ட ‘காளம்’ என்ற நீலநிற விஷமும் .. பாற்கடலில் பிறந்த ‘ஆலம்’ என்கிற கருப்பு விஷமும் சேர்ந்து கருப்புப் புயல் போல் கொடிய வெப்பமும் .. கடும் புகையும் கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது .. தலைப்பக்கம் நின்ற பல நூற்றுக்கணக்கான அசுரர்கள் எரிந்து சாம்பலாக .. எல்லோரும் பயந்து போய் ஈசனிடம் முறையிட கயிலங்கிரி சென்றனர் நந்திபெருமானிடம் அனுமதி பெற்று உள்ளே சென்று சிவபெருமானிடம் அழுது தொழுது முறையிட்டனர் .. அப்பொழுது ஈசன் தன் நிழலில் இருந்து தோன்றியவரும் .. பேரழகருமாகிய ‘சுந்தரர்’ என்னும் அணுகத் தொண்டரை அவ்விஷத்தைக் கொண்டுவர பணித்தார் .. சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும் கொடிய ஆலகால விஷத்தை ஒருதுளியாகக் கொண்டுவந்தார் .. எல்லோரும் அதிசயிக்க சிவபெருமான் ஒருகணநேரம் ‘விஷாபகரணமூர்த்தி’ என்னும் ரௌத்ரவடிவம் தாங்கி அவ்விஷத்த உண்டருளினார் .. அப்போது தேவியார் அவ்விஷத்தை ஈசன் உண்டால் சகல புவனமும் அழியுமே என்று கருதி அவருடைய கழுத்தில் தங்கும்படி செய்தாள் ..கண்டத்தில் விஷத்தை நிறுத்தியதால் ’நீலகண்டர்’ ஆனார் .. விஷம் கொண்டுவந்த சுந்தரர் ‘ஆலால சுந்தரர்’ என்றழைக்கப்பட்டார் .. கயிலையில் ஈசன் விஷம் உண்ட பிறகு சிறிது மௌனமாக இருந்தார் .. அனைவரும் போற்றித் துதிபாடியவாறு இருந்தனர் .. ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுதும் பள்ளிகொண்ட நிலையில் இருந்தார் .. பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில் எழுந்து உமையவளை ஒருபக்கம் கொண்டு சூலத்தைச் சுழற்றி ’சந்தியா நிருத்தம்’ எனும் நடனத்தை நடனமாடினார் .. அனைவரும் “ஹரஹர” என்று துதித்தனர் .. இவ்வேளையே பிரதோஷ காலமாகும் .. சிவனைத் துதித்து துன்பங்களில் இருந்து நீங்கி இன்பத்தை அடைவோமாக .. “ஓம் சிவாய நமஹ” .

No comments:

Post a Comment