அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய் ஆதிக்கம் நிறைந்த இன்றைய நாளில் கலியுகக் கடவுளாகிய கந்தபெருமானை வணங்கி வேண்டியதெல்லாம் அனைவரும் பெற்று மகிழ்ந்திட வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஓம் சரவணபவாய .. .. // .. .. முருகவழிபாடு .. முருகு அல்லது முருகன் என்னும் சொல் மிக மிகத் தொன்மையானது .. ‘ முருகு’ என்ற சொல்லுக்கு அழியாத அழகும் .. குன்றாத இளமையும் .. இயற்கை மணமும் .. எல்லாப் பொருள்களிலும் கடவுள் தன்மை உண்டு என பல பொருள்கள் உண்டு .. ’ மு ‘ என்பது திருமாலையும் .. ‘ ரு ‘ என்பது சிவபெருமானின் அம்சத்தையும் .. ‘ க ‘ என்பது பிரம்மனையும் குறிக்கும் என்பர் .. அதுபோல் உருவ வழிபாட்டில் தொன்மையானதும் முருகன் வழிபாடாகும் .. முருகன் குறிஞ்சி நிலக்கடவுள் .. மலையும் மலைச்சார்ந்த இடங்களின் கடவுள் .. முருகன் தமிழ்க்கடவுள் .. முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினான் என்பது வரலாறு .. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான் ..தமிழின் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தன்னுடைய கண்களாகவும் .. தமிழில் வல்லினம் .. மெல்லினம் .. இடையினம் .. விளங்கும் எழுத்துக்களாறும் முகங்களாகவும் .. தனிநிலை எனப்படும் ஆய்தமே ஒப்புயர்வற்றுத் திகழும் வேலாகவும் கொண்டு .. தமிழ்த் தெய்வமாகிய முருகன் தமிழ்வடிவாக விளங்குகின்றான் .. ஞானமே உடலாகவும் .. இச்சாசக்தி .. கிரியாசக்தி .. ஞானசக்தி என்னும் முச்சக்திகளே மூன்று கண்களாகவும் .. இப்பெரிய உலகமே கோயிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகனே ! .. அவனுடைய ஆறுதிருமுகங்களில் உலகுக்கு ஒளியையும் .. ஆன்மாக்களுக்கு அழியாத பேரின்ப ஒளியையும் தருவது ஒருமுகம் ..ஆன்மாக்களுக்கெல்லாம் அவற்றின் வினைகளைப் போக்கி வேண்டும் வரங்களை அளிப்பது ஒருமுகம் ..வேள்விகள் .. வேத ஆகமச்சடங்குகள் இவற்றை ஐயமின்றி முற்றும்பெறச் செய்வது ஒருமுகம் .. முனிவர்களுக்கு நூற்பொருளை விளக்குவது ஒருமுகம் .. நேசமுடன் வள்ளி தெய்வானை அம்மையர்க்கு தருவது ஒருமுகம் .. அசுரரை அழித்துக் களவேள்வி செய்கிறது ஒருமுகம் .. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் நூறாயிரம் சூரியன்கள் ஒரே காலத்தில் ஒளிவீசுவது போன்ற பேரழகு வாய்ந்த தெய்வீகவடிவம் கொண்டவன் முருகன் .. முருகன் ஒரு தொகுப்புத் தெய்வம் .. முருகனை வணங்கினால் பல கடவுளரை வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம் .. முருகனை அன்புடன் வழிபட்டு .. முருகா !! முருகா !! எனக்கூறித் தியானிப்பவர்கள் என்றும் குறையாத பெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள் .. அவர்களை ஒருபோதும் எத்தகைய துன்பமும் அணுகாது .. // .. WISH YOU ALL A VERY HAPPY MORNING WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA ..

No comments:

Post a Comment