அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று கார்த்திகை மாதப்பிறப்பு .. “ ஸ்வாமியே சரணம் ஐயப்பா “ என்ற பக்திகோஷமே எங்கும் வியாபித்திருக்கின்றது .. சபரிமலை ஐயப்பபக்தர்கள் மாலையணிந்து மண்டலவிரதம் தொடங்குவார்கள் .. 41 நாட்கள் விரதமிருந்து யாத்திரை மேற்கொள்வர் .. இதனால் இம்மாதம் ஸ்ரீஐயப்பனுக்கும் .. பக்தர்களுக்கும் உரிய மாதமாகவும் கருதப்படுகிறது .. அனைத்து அன்புள்ளங்களையும் காத்தருளுமாறு ஸ்ரீஐயப்பனை வேண்டுகின்றேன் .. ‘ஸ்வாமியே ! சரணம் ஐயப்பா ! ! .. ஐயப்பனின் வரலாறு .. // .. மகசி என்பவள் அரக்கர்களின் அரசரான ‘ மஹிஷாசுரனின் தங்கையாவாள் .. மஹிஷாசுரனின் வதத்திற்கு பிறகு அதற்கு காரணமான தேவர்களை வதைக்க மகசி முடிவு செய்தாள் .. பிரம்மாவை நோக்கி கடுந்தவமிருந்தாள் ..அதனால் மகிழ்ந்த பிரம்மா சிவனுக்கும் திருமாலுக்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகசிக்கு மரணம் ஏற்படும் என்று வரம் தந்தார் .. பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுபகவான் பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது .. பின்னர் யோகம் களைந்து எழுந்தபோது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுபகவானின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார் .. அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பனாவார் ,, இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு (ஹரி) விஷ்ணு .. ஹரன் (சிவன்) ஹரிஹரன் என்ற பெயரும் உண்டு .. ஐயன் என்பது ஆர்ய என்பதின் திரிபு .. ஆர்ய என்றால் மதிப்பிற்குரிய என்பது பொருள் .. பந்தள அரசனான ராஜசேகரன் என்பவர் பம்பாதீரத்தில் குழந்தையாக இருந்த ஐயப்பனை கண்டெடுத்தார் .. அவருக்கு குழந்தையில்லாதமையால் ஐயப்பனை வளர்க்க உத்தேசித்தார் .. குழந்தையின் கழுத்தில் மணி இருந்தமையினால் “மணிகண்டன் “ என்று பெயரிட்டார் .. பந்தள அரசிக்கு ராஜராஜன் என்ற மகன் பிறந்தார் .. அதுவரை மணிகண்டன் மீது பிரியம் காட்டிய அரசிக்கு தன் மகன் மீது பிரியம் உண்டானது .. ஆனால் பந்தள இளவரசனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்டுவதாக ராஜசேகரன் முடிவு செய்தார் .. இந்த முடிவினை விரும்பாத அரசி தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நம்பச்செய்து அதற்கு புலிப்பால் வேண்டுமென மருத்துவரை விட்டு ஐயப்பனிடம் சொல்லச்சொன்னாள் ..அது சூழ்ச்சி என்பதைஉணர்ந்தும் தன் அன்னைக்காக கானகம் சென்றார் .. அங்கு மகசியை வதம் செய்தார் .. ஐயப்பனைப் போற்றுவோம் .. அவனருள் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் நலமுடனும் .... WISH YOU ALL A BLESSED MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHREE IYAPPA ..

No comments:

Post a Comment