அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று ஸர்வ ஏகாதசி விரதமும் ஆகும் .. காத்தல் கடவுளாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாய் அமைந்திடவும் .. எடுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! .. .. ஏகாதசி தோன்றிய புராண வரலாறு .. // .. தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் .. மானிடர்களுக்கும் .. மிகுந்த தொல்லை அளித்து வந்தான் “முரன்” என்னும் அசுரன் இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனைத் துதித்தனர் .. அவர்களை மஹாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான் .. அதன்படி அனைவரும் மஹாவிஷ்ணுவை சரணடைந்தனர் .. அவர்களைக் காக்க எண்ணிய மஹாவிஷ்ணு அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார் .. 1000 ஆண்டுகள் கடுமையா நீடித்தது .. அதன்பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மஹாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள குகையில் படுத்து ஓய்வெடுத்தார் .. அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு “முரன்” பகவானைக் கொல்லத் துணிந்தபோது அவருடைய திவ்யசரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது .. இவளை அசுரன் நெருங்கியவேளையில் அவளிடமிருந்து வெளிப்பட்ட ஓங்காரமே அசுரனை எரித்து சாம்பலாக்கியது .. விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன் அந்த சக்திக்கு ‘ஏகாதசி’ எனப்பெயரிட்டு .. உன்னை விரதமிருந்து போற்றுவோருக்கு நான் சகலநன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக் கொண்டார் .. நாராயணனின் அருள் தங்களனைவருக்கும் பரிபூரணமாகக் கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வீர்களாக என்று வாழ்த்தி வணங்குகிறேன் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. // .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU FOREVER ..

No comments:

Post a Comment