PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதம். மாலையில் 4.30 - 6.00 மணிவரையிலான பிரதோஷ வேளையில் சிவாலயம் சென்று நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கூடாக சிவதரிசனம் செய்வது சிறந்த பயனை அளிக்கும் ..தங்களனைவருக்கும் சகலதுன்பங்களும் பனிப்போல் நீங்கி .. மகிழ்ச்சிகரமான வாழ்வு மலர்ந்திட வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. ” ஓம் சிவாய நமஹ ” ... // .. பிரதான தோஷங்களைநீக்குவது தான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு பிரதோஷ தினத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் .. பிரம்மா .. விஷ்ணு ஆகியோரும் வழிபாடு செய்வர் .. சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம் .. எனவே அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் பிரதோஷ வேளையில் (மாலை 4.30 - 6.00மணி வரை) நாமும் பிரார்த்தனை செய்தால் இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன .. சிவனின் வாகனமான நந்திபகவானுக்கும் மரியாதை செய்யக்கூடியது பிரதோஷ வழிபாடு .. நான்கு வேதங்கள் .. 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர் .. சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்திபகவான் என்று ஐதீகம் கூறுகிறது .. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும் .. இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது .. மெத்தப்படித்திருந்தாலும் நந்திபகவான் மிகவும் அடக்கமானவர் .. சிவன்கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது .. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும் .. எனவே பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும் .. நினைவாற்றல் பெருகும் .. தோஷங்கள் நீங்குகிறது .. சிவனைப் போற்றுவோம் .. சிவயோகம் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE BLESS YOU WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY ..

No comments:

Post a Comment