அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று சதுர்த்திவிரதமும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று விநாயகரை தரிசிப்பது மேன்மையைத்தரும் .. தங்கள் அனைவரது எண்ணங்கள் யாவும் நிறைவேறவும் .. சகலசம்பத்துக்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும் வாழ்த்துகின்றேன் .. விநாயகரை வணங்குகின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே! வக்ரதுண்டாய தீமஹி! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!! .. மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதற்கடவுளாக விளங்குகிறார் .. இவரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவர் .. மண்பிள்ளையாரைப் பூஜித்தால் நல்ல பதவி கிடைக்கும் .. புற்றுமண்ணில் செய்த பிள்ளையாரை பூஜித்தால் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையலாம் .. வெல்லத்தால் செய்த பிள்ளையாரை பூஜித்தால் சகலபாக்கியத்தையும் அடையலாம் .. உப்பினால் செய்தபிள்ளையாரை வணங்கினால் எதிரிகளை வெல்லலாம் .. வெள்ளெருக்குப் பிள்ளையாரை பூஜித்தால் ஞானம் பெறலாம் .. பசுஞ்சாணியால் பிள்ளையார் செய்து பூஜித்தால் எண்ணிய காரியங்கள் கைகூடும் .. வெண்ணெய்யில் செய்து பூஜித்தால் நோய்கள் நீங்கும் .. நிவேதனம் நமக்கு சொல்வது என்ன..? விநாயகருக்கு மோதகம் .. கரும்பு அவல் .. பொரி .. ஆகியவற்றைப் படைக்க வேண்டும் .. இந்த நிவேதனப் பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கிக்கிடக்கிறது .. அது என்ன என்று தெரிந்து படைத்தால் வாழ்க்கை வளமாகும் .. மோதகம் - இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும் உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கின்றது .. மனதை வெள்ளையாக வைத்துக்கொண்டால் கண்ணுக்குக்குத் தெரியாத இறைவனை அடையலாம் .. என்ற தத்துவத்தில் படைக்கப்படுகிறது .. கரும்பு - கடிப்பதற்கு கடினமானாலும் .. இனிமையானது .. வாழ்க்கையும் இப்படித்தான் கஷ்ட்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின்படி படைக்கப்படுகிறது .. அவல் - பொரி .. ஊதினாலே பறக்கக்கூடியவை .. இப்பொருள்கள் வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளிவிட வேண்டும் என்பதைக் குறிக்கிறது .. // .. சதுர்த்திநாளாகிய இன்று விநாயகரைப் போற்றி .. விநாயகரின் அருளால் செல்வாக்கும் .. சொல்வாக்கும் பெறுவீர்களாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும.. MAY LORD GANAPATHY PROTECT YOU .. AND GUIDES YOU IN EACH STEPS YOU TAKE .. HAVE A BLESSED WEDNESDAY .. 'JAI GANAPATHY

No comments:

Post a Comment