அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று சர்வ மங்கலங்களையும் தரும் அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து நலங்களும் .. வளங்களும் தங்களனைவரும் பெற்றிட பிரார்த்திக்கின்றேன் .. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே ! சங்க சக்ர கதாஹஸ்தே ! மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !!! .. மஹாமாயை வடிவாகத் துலங்குபவளும் .. ஸ்ரீபீடத்தில் உறைபவளும் .. தேவர்களால் பூஜிக்கப்படுபவளும் .. சங்கம் .. சக்ரம் .. கதை .. இவைகளைக் கையில் தரித்தவளுமான மஹாலக்ஷ்மித் தாயே ! நமஸ்காரம் ! .. கருடவாகனத்தில் அமர்ந்திருப்பவளும் .. கோலாஸுரன் எனும் அசுரனை நடுநடுங்க வைத்தவளும் .. சகலவிதமான பாவங்களைப் போக்குபவளுமான திருமகளே ! நமஸ்காரம் ! .. அன்னையைப் போற்றுவோம் .. அவளது அருட்கடாக்ஷ்ம் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A HAPPY MORNING WITH THE BLESSINGS OF GODDESS LAXMI .. MAY SHE SHOWER YOU WITH HEALTH .. WEALTH AND HAPPINESS .. .. 'JAI MATA DI' ..

--------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment