அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஐப்பசி பௌர்ணமியாகிய இன்று அனைத்து சிவாலயங்களிலும் “அன்னாபிஷேகம் “ எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்கமூர்த்திக்கு நடத்தப்படுகிறது .. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்தும் .. பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும் .. அன்னம் பரப்பிரம்மம் என்பர் .. உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மீகம் .. உடலை வளர்ப்பதுடன் உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான் .. அன்னதானமே தானங்கள் அனைத்திலும் சிறந்தது .. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!! ஒரு அளவிற்கு மேல் போதும் என்று திருப்தி ஏற்படுத்துவதும் அன்னமே ... திருக்கையிலை மலை வாழும் அபிஷேகப்பிரியரான எம்பெருமான் அன்னத்தையே அபிஷேகம் செய்வதை மனம் உகந்து ஏற்கிறார் .. ஐப்பசி மாதம் அடைமழை மாதம் .. குளிர்ச்சி பொருந்திய மாதம் .. எல்லாக் கடவுளுக்கும் எத்தனையோ அபிஷேகங்கள் செய்யப்பட்டாலும் .. அன்னாபிஷேகம் எம் பெருமானுக்கு மட்டுமே செய்யப்படுகிறது .. சித்தர் .. பெருமக்கள் .. அனைவரும் சந்திரபகவானை பௌர்ணமி தினத்தில் தரிசிப்பதாக ஓர் ஐதீகம் .. ஆகவே இன்று சந்திரதரிசனம் செய்வது சித்தர் பெருமக்கள் அனைவரையும் தரிசிக்கும் நற்பலனைக் கொடுக்கும் .. சந்திரபகவான் தனது 16 கலைகளுடன் பூர்ணமாகப் பிரகாசித்து அமிர்த தாரையைப் பொழிகிறார் .. சந்திரனுக்கு சாபவிமோசனம் தந்து சந்திரகலையை சிரசில் சூடியருளிய எம்பெருமான் சந்திரனுக்குகந்த பௌர்ணமி நன்னாளில் துலாமாதமாகிய ஐப்பசியில் ஐம்பூதங்களின் வடிவாகிய அன்னாபிஷேகம் கண்டருளுகிறார் .. அரிசி நிலத்தில் நெல்லாக விளைவது .. நெல்விளைவதற்கு ஆகாயத்திலிருக்கும் கருமேகம் .. காற்றின் உதவியுடன் மழையாகப் பொழிய வேண்டும் .. பின் இடித்து குற்றி அரிசியுடன் நீரோடு சேர்ந்து நெருப்பின் உதவியுடன் பக்குவமான அன்னமாகிறது .. அம்பிகைபாகனுக்கு அபிஷேகம் செய்வதில் அற்புதமான தத்துவங்கள் மறைந்திருக்கின்றன .. உதாரணமாக பால் அபிஷேகம் செய்வதன் பலன் வாழ்வில் சுகம் உண்டாகும் என்று அனைவரும் அறிந்திருப்பீர்கள் .. பால் மன அமைதியை ஏற்படுத்துவதில் பெரும்பங்குவகிக்கிறது . கொதிப்பான மனநிலையில் ஒரு டம்ளர் பால் அருந்தினால் மனம் ஒருசமநிலைக்கு வரும் .. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு அல்லவா .. ஆகவே மனமது சந்தோஷமானால் எல்லாம் சந்தோஷமாக சுகமாகத் தெரியும் .. இதை குறிப்பால் உணர்த்துவதற்காகவே பால் அபிஷேகம் செய்கிறோம் .. இன்னொரு தத்துவமும் உண்டு . நம் அனைவருடைய உள்ளத்தில் உள்ளும் ஆத்ம ஸ்வரூபமாகிய இறைவன் உறைகிறார் .. கர்மவினைகளால் கட்டப்பட்டு பிறவி எடுத்திருக்கும் நம் அனைவரையும் நம்முள் இருந்து கண்காணித்துக் காக்கிறார் இறைவன் ..கோவிலில் இருக்கும் இறைவனுக்குச் செய்யும் அபிஷேக ஆராதனைகளின் மூலம் நம் ஆத்மாவும் புனிதமடைகிறது .. அன்னாபிஷேக நன்னாளில் பகலில் எல்லா அபிஷேகங்களும் முறையாகச் செய்யப்பட்டு பின் நிறைவாக சுத்த அன்னத்தால் இறைவன் திருமேனி அலங்கரிக்கப்பட்டுகிறது இறைவன் திருமேனி முழுவதும் அன்னம் சாற்றப்பட்டு கண்களாக திராட்சைப்பழங்கள் .. நெற்றித்திலகமாக உளுந்துவடை .. இரண்டு பெரிய புடலங்காயை இணைத்து மாலை என்று அழகாக அம்மையப்பனை அலங்கரித்து தீபாராதனைகள் நடைபெறும் .. பின் அதனை பிரசாதமாக வழங்கப்படுகிறது .. லிங்கத்தின் மேலிருக்கும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் சிவஸ்வரூபம் .. ஆகவே லிங்கத்தை இன்றைய நாளில் தரிசித்து கோடி லிங்க தரிசனத்தைப் பெறுவோமாக ..பரமனைப் பணிந்து அனைவருக்கும் குறையேதுமின்றி மகிழ்ச்சிகரமான வாழ்வு மலர பிரார்த்திக்கின்றேன் .. ஓம் சிவாய நமஹ .. வாழ்க வளமுடனும் நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. MAY LORD SHIVA BLESS YOU AND BE WITH YOU FOREVER .. HAVE A BLESSED FRIDAY TOO ..

No comments:

Post a Comment