அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியனுக்குரிய நாள் என்பதால் சூரியபகவானை விரதமிருந்து வழிபடுவது விசேஷம் .. இதனை ஆதி விரதமென்றும் கூறுவார்கள் .. சூரியனுக்கு அதிபதி சிவன் என்பதால் சிவன் கோவில்களில் அர்ச்சனை செய்து வழிபடுவதோடு நவக்கிரக சந்நிதியை வலம்வந்து சூரிய பகவானை நோக்கி .. காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும் பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை நல்கும் .. வாசி ஏழுடைய தேர் மேல் மஹாகிரிவலமாய் வந்த தேசிகா எனை ரட்சிப்பாய் ! செங்கதிரவனே போற்றி ! போற்றி ! ! .. என்று ஸ்தோத்திரம் சொல்லி வணங்க வேண்டும் .. இவ்வாறு வணங்குவதால் உடற்பிணி .. கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்குமென்று கூறப்படுகின்றது .. ஆதித்யஹ்ருதயம் படிக்க வேண்டும் ..ராமபிரான் ராவணனை வெற்றிக் கொள்ள சூரியபகவானைத் துதிக்குமாறு அகத்திய முனிவர் உபதேசித்த ஸ்தோத்திரம்தான் ஆதித்யஹ்ருதயம் .. அனைவரும் துதித்து சிறந்த ஆரோக்கியத்தையும் .. அறிவுத்திறனையும் .. அனைத்து சம்பத்துக்களையும் பெறுவீர்களாக என்று வாழ்த்தி வணங்குகிறேன் .. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாஸஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! . MAY LORD SURYA'S BLESSINGS AND GUIDANCE BE WITH YOU ALL FOREVER .. HAVE A BLESSED SUNDAY TOO ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment