அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாய் அமைந்திடவும் .. அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் கணபதியைப் பிரார்த்திக்கின்றேன் .. ‘ கஜாநநம் பூதகணாதி ஸேவிதம்! கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்! உமா ஸுதம்! சோக விநாச காரணம்! நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்!! .. “விநாயகர் அகவல் பிறந்த கதை” .. ’சீதக்களபச் செந்தாமரைப்பூம்பாதச் சிலம்பு’ ..என்று ஒளவையார் பாடிய விநாயகர் அகவலைச் சீர்காழி கோவிந்தராஜன் பாடக்கேட்டிருப்பீர்கள் .. தித்திக்கும் தேவகானம் .. இந்த அகவலில் சில வார்த்தைகள் நமக்குப் புரியாது .. ஆனால் விநாயகருக்கு மிகவும் பிடித்த பாடல் இது .. விநாயரே ஒளவையார் முன் நேரில் தோன்றி அவரைப்பாடும்படி சொல்லி தலையாட்டிக் கேட்ட பாடல் இது .. // .. திருமாக்கோதை என்னும் சேரமான்பெருமான் மன்னர் .. சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு நெருங்கிய நண்பர் .. ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் வெறுத்து கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தார் .. சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும் .. தேவர்களையும் அனுப்பினார் .. சுந்தரரும் யானைமீது கிளம்பிவிட்டார் .. அப்போது வெளியில் சென்றிருந்த சேரமான் பெருமாள் வானத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்தார் .. அவருக்கு சுந்தரரைப் பிரிய மனமில்லை .. எனவே தன் குதிரையில் ஏறி அதன் காதில் ‘சிவாயநம’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார் .. உடனே குதிரையும் கைலாயத்தை நோக்கி பறந்தது .. இருவரும் கீழ்நோக்கிப் பார்த்தனர் .. ஓரிடத்தில் ஒளவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக்கண்டு நீயும் வாயேன் பாட்டி என்று அழைத்தனர் .. பூஜையை முடித்துவிட்டு வருகிறேன் .. என்று ஒளவைப்பாட்டி பதில் அளித்தார் .. அப்போது விநாயகர் ஒளவையார் முன் தோன்றி ‘ நீயும் கைலாயம் போக வேண்டுமா என்றார் ’ .. “நீ இருக்கும் இடமும் .. உன்னைப் பூஜிக்கும் இடமுமே எனக்கு கைலாயம் போலத்தான் “ நீ விருப்பப்பட்டால் என்னைக் கைலாயத்திற்கு கொண்டு போ என்றார் .. ஒளவையே! நீ குழந்தைகளுக்காக நிறைய பாடியிருக்கிறாய் தெய்வக்குழந்தையான என்னைப்பற்றி ஒரு பாட்டுப் பாடு என்றதும் .. “சீதக்களப” என ஆரம்பிக்கும் அகவலைப்பாடினார் .. பாடி முடிந்ததும் விநாயகர் மகிழ்ச்சியில் ஒளவையை தும்பிக்கையால் தூக்கி சுந்தரரும் .. சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் சென்று சேர்வதற்கு முன்பாகவே கொண்டு சேர்த்து விட்டார் ..கைலாயத்தை அடைந்த பிறகு ஒளவையாரை சுந்தரரும் சேரமான் பெருமானும் ஆச்சரியப்பட்டு நடந்த விபரத்தைக் கேட்டனர் .. விநாயகர் முதற்கடவுள் .. அவரை வணங்குவோர் எல்லாவற்றிலும் ’முதல் நிலையில்’ தான் இருப்பார்கள் என்றாள் ஒளவை .. இப்படி பிறந்ததுதான் விநாயகர் அகவல் என்னும் தேன்தமிழ் பாடல் .. // .. விநாயகரைப் போற்றுவோம் .. எதிலும் .. எல்லாவற்றிலும் .. முதல்நிலையில் ஜொலிப்போம் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .... WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANESH .. MAY HE SHOWER YOU WITH HAPPINESS AND VICTORY IN EACH STEPS YOU TAKE ..
PANVEL BALAGAR

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment