சாஸ்தா விடுதிகள் :-
குளத்தூரிலேயிருந்து குடியிருந்து அவதரித்து
வளர்தொருவாய் பெற்றடுத்த மாதா அவளுக்கிணையாய்
குளத்தூரில் பதி நற்குலக் கன்னியர்கள் தந்த செல்வம் 
குளத்தூரில் ஐயன் என்றால் குற்றம் ஒன்றும் வராதே !!
மாணிக்கமாலை மணி மாலை பூமாலை
காணிக்கை கொண்டு வந்து காண்பார் தினந்தோறும்
ஆணிப்பொன்மார்பன் அழகன் குளத்தூரானைப்
பேணித்தொழாய் நெஞ்சே !! பிழைகலொன்றும் வராதே !!
கற்சரடு பொற்பதக்கம் கனகமுத்துச் சுவடிகளும்
மெய்யாய் சுமந்திருக்கும் வீரகா உன் திருமேனி
வட்டமிட்டு வரும் பேயைத் தடியெடுத்துதான் விரட்டும்
மிக்க நல்ல குளத்தூரான் வெள்ளைக்கல் ஆதிபனே !!!
பலமரங்கள் கிடுகிடுடென மலையருவி திடுதிடென
இரவுபகல் அறியாமல் பெருமாரி மொழிகாலம்
பாராய் பராபரனே !! பரதேசிக்காவலனே !!
வரங்கள் கொடுப்பவளே !!வாழ்க்குளத்தூராதிபனே !

No comments:

Post a Comment