PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று பிரதோஷ விரதமும் திரயோதசி திதியுமாகும் .. ஏகாதசியன்று இரவு முழுவதும் தூங்காமல் பாற்கடலைக் கடைவதில் எல்லோரும் முனைந்திருந்தனர் .. மறுநாள் காலை துவாதசியன்று அதிகாலை வேளையில் பாற்கடலில் இருந்து அமிர்தம் தோன்றியது .. அந்த அமிர்தத்தை உண்ண வேண்டும் என்று தேவர்களும் அசுரர்களும் போட்டியிட்டனர் .. திருமால் அங்கும் புகுந்து ஒரு தந்திரம் செய்து அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்தார் .. அமிர்தத்தை உண்ட தேவர்கள் புதியவலிமையும் .. பொலிவும் பெற்றனர் .. அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்தனர் .. அமிர்தம் உண்ட மகிழ்ச்சி அசுரரை வென்ற களிப்பு .. ஆகியவற்றால் தேவர்களுக்குப் போதை ஏறியது .. எனவே அவர்கள் அமிர்தம் பெறக் காரணமாக இருந்த பரமேஸ்வரனை அன்று முழுவதும் மறந்திருந்தார்கள் .. மறுநாள் .. திரயோதசி (பிரதோஷம்) அன்று அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கம் மேலிட்டு உடனடியாகத் தங்கள் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து ஈஸ்வரனிடம் மன்னிப்பை வேண்டினர் .. ஈசனும் அவர்கள் செய்த தவறை மன்னித்தார் .. அவர்களுடைய மகிழ்ச்சியின் பொருட்டு நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஈசன் ஆனந்தத்தாண்டவம் ஆடினார் .. இதன் காரணமாகத்தான் பிரதோஷத் தினத்தன்று நந்திதேவருடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஐதீகம் ஏற்பட்டது .. இவ்விதம் நந்திபகவானைக் குனிந்து வணங்குவதை .. இப்பெருமானின் காதில் ஏதோ ரகசியம் பேசுவதாகக் கருதிகொண்டு இப்பழக்கம் தொடர்ந்து வருகிறது .. இது ரிஷபப்பெருமானின் காதுகளில் ரகசியம் பேசுவதல்ல .. இரு கொம்புகளின் இடையே ஈசனைக் கண்டு வணங்குவதாகும் .. பிரதோஷ வேளையில் (மாலை 4.30 - 6.00 மணி) நந்திபகவானின் இரண்டு கொம்புகளின் நடுப்பகுதியைத் தொட்டு “ சிவாய நம “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறி வணங்கிட வறுமை .. கடன் .. நோய் .. மரணபயம் .. எல்லாம் நீங்கிடும் .. // .. ஈசனைப் போற்றுவோம் .. தங்களனைவருக்கும் அனைத்து செல்வங்களும் பெற்று .. மகிழ்ச்சிகரமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன் .. ஈசனைப் பிரார்த்திக்கின்றேன் .. .. “ஓம் சிவாய நமஹ” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..  .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH PROSPERITY .. BEST HEALTH AND HAPPINESS .. 'OM NAMASHIVAAYA .::::GS

No comments:

Post a Comment