அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. ‘தீபத்திருநாள் வாழ்த்துக்களும்’ .. இந்நாள் கார்த்திகேயனுக்கும் உகந்தநாள் .. சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப்பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க .. அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிச் சீராட்டினர் .. சிபபெருமான் பிராட்டியாருடன் சரவணப்பொய்கைக்கு எழுந்தருளி .. உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க ஆறு உருவங்களும் ஒரு உருவமாய் .. ஆறுமுகக் குழந்தையாய் தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது .. கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர் .. சிவபெருமான் அவர்களை நோக்கி “ உங்களுக்கு மங்களம் உண்டாகுக .. உங்களால் வளர்க்கப்பட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம் .. உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டுவதாக “ என்று திருவாய் மலர்ந்தருளினார் .. .. கார்த்திகை விளக்கின் தத்துவம் // .. எண்ணெய் கரைகிறது .. திரி கரிகிறது .. ஆம் தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது .. பிறர் நலம் பேணுவதற்காக தன்னுயிரையே தியாகம் செய்யவேண்டும் என்பது கார்த்திகை விளக்கின் தத்துவம் .. அதுமட்டுமல்ல .. தீபத்தின் ஒளி மனிதர்களுக்கு மட்டுமல்ல பிற உயிரினங்களின் மீதும் .. உயிரற்ற பொருட்கள் மீதும்படுகிறது புழு.. கொசு .. நிலம் .. நீர்வாழ் பிராணிகள் மீதெல்லாம் படுகிறது .. தீபஒளி எப்படி எல்லோர் மீதும் பரவுகிறதோ அதுபோல் மனிதனின் மனதில் எழும் அன்பு ஒளி எல்லோர் மீதும் பட வேண்டும் என்பதையே கார்த்திகை தீபம் நமக்கு உணர்த்துகிறது .. கார்த்திகேயனைத் துதித்து தங்கள் அனைவருக்கும் அனைத்து சுபீட்சங்களுடன் .. கார்த்திகேயனின் திருவருளும் கிட்ட பிரார்த்திக்கின்றேன் .. ”ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வர புத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!! .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS OF LORD MURUGA-----GS
No comments:
Post a Comment