அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மார்கழித் திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்குரிய நாளாகும் .. ‘ நமசிவாய’ என்று சொல்வோமே ! நன்மைகள் ஆயிரம் கொள்வோமே! .. மனிதனுக்கு சத்வ .. ரஜோ .. தமோ .. என்னும் மூவித குணங்கள் இருக்கின்றன .. இதில் சாதுக்களிடம் இருக்கும் உயர்ந்தகுணமே ‘சத்வகுணம்’ .. ‘ரஜோ’ .. ’தமோ’ .. குணங்கள் நம்மை தாழ்ந்த நிலைக்கு கொண்டு செல்பவை .. காமம் .. கோபம் .. பொறாமை கொண்டு செயலைச் செய்பவன் ‘ரஜோகுணம்’ பொருந்தியவன் .. சோம்பல் .. தாமதம் ஆகிய குணங்களைக் கொண்டவன் ‘தாமசகுணம்’ பொருந்தியவன் .. சிவனை அபிஷேகம் செய்வது புறவழிபாடு .. உண்மையில் சிவபெருமான் ஒளிவடிவமானவர் தவக்கனலால் அவர் ஜொலிக்கிறார் .. அவரிடம் நாம் இறைவா! பால் .. தண்ணீர் போன்றவற்றால் நாங்கள் அபிஷேகம் செய்கிறோம் நீர் எம்மை ஞானத்தால் நீராட்டுவீராக .. பாவம் அனைத்தும் போக்கி புனிதமாக்குவீராக உமது அருளால் அநீதியும் .. அக்கிரமும் .. ஒட்டு மொத்தமாக அகற்றப்படட்டும் .. இரண்டற்ற நிலையில் பரம்பொருளான உமது அருள் எம்மிடம் பூரணமாக நிலைத்திருக்கட்டும் .. ‘ நம் மனவீட்டில் விளக்காகத் திகழும் ஐந்தெழுத்து மந்திரம் “நமசிவாயத்தை” இயன்றவரைச் சொல்லி ஆயிரமாயிர நன்மைகளை வாழ்வில் பெறுவோமாக .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாய் அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. “ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ... .. WISH YOU ALL A HAPPY DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE BLESS YOU WITH HAPPINESS AND GOOD HEALTH .. 'OM NAMAHSHIVAAYA ' ..

No comments:

Post a Comment