அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றி வணங்கப்படும் குருநாதராகிய ஷீர்டிபாபாவினதும் தினமும் ஆகும் .. அவரைப் போற்றி துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாய் அமைந்திடவும் .. எடுக்கும் அத்தனை காரியங்களும் வெற்றி பெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே ! சச்சிதானந்தாய தீமஹி ! தந்நோ சாய் ப்ரசோதயாத் !! இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மீக வழிகாட்டிகளில் ஒருவராகவும் .. உலக மக்களுக்கு தொடர்ந்து அருள்பாலித்து வருவருபவராகவும் திகழும் ஷிர்டி சாய் பாபாவை இறைவனின் அவதாரமாகவே கண்டு பலகோடி மக்கள் வழிபட்டு வருகின்றனர் .. சாய் என்றால் .. ஷக்சாத் .. ஈஸ்வர் என்பதன் சுருக்கமாகும் .. அதன் பொருள் “முழுமையான இறைவன்” என்பதாகும் .. மராட்டிய மாநிலம் ஷிர்டியில் தோன்றி தனது வாழ்நாளை அங்கேயே கழித்து சமாதியடைந்த சாய்பாபா .. தன்னைச் சந்தித்தவர்கள் அனைவருக்கும் ஆசிவழங்கியது மட்டுமன்றி அவர்கள் மனதில் அன்பை விதைத்து எப்பொழுதெல்லாம் அவர்கள் நாடுகின்றார்களோ .. அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு ஆசிவழங்கி அவர்களின் வாழ்க்கையில் அமைதியையும் .. மகிழ்ச்சியையும் நிலையச் செய்தார் .. 19ம் நூற்றாண்டில் பிறந்து 1918ல் சமாதியடைந்த பாபா தனது பிறப்பின் நோக்கமே எவ்வித பாகுபாடும் பார்க்காமல் எல்லோருக்கும் ஆசிவழங்குவதே என்று கூறியுள்ளார் .. தன்னை நாடிவந்த நோயாளிகளை ஆசீர்வதித்து அவர்களை குணப்படுத்தினார் .. பலரின் உயிரைக்காத்தார் .. விபத்துக்களைத் தவிர்த்தார் .. ஏழ்மையில் வாடியவர்களுக்கு நல்வாழ்வை அளித்தார் .. மனிதர்களை அமைதிப்படுத்தியது மட்டுமன்றி மற்றவர்களோடு இசைந்து வாழவும் உதவினார் .. எல்லாவற்றிற்கும் மேலாக தன்னிடம் அடைக்கலமான பக்தர்களை அந்த உன்னதமான ஆன்மீக பரிணாம வளர்ச்சிக்கும் .. திருவுருமாற்றத்திற்கும் வழிகாட்டினார் .. தனது வார்த்தையாலும் .. நடத்தையாலும் சாதகர்களுக்கு வழிகாட்டிய உன்னத பேரொளியின் அடையாளமாக பாபா திகழ்ந்தார் என்று அவரைக் கண்ட .. அவர் காலத்தில் வாழ்ந்த்துவந்த ஒருவர் கூறியுள்ளார் .. பாபாவின் பக்தர்களுக்கு அவர்தான் கடவுள் .. இது அவர்களின் கற்பனையல்ல .. அனுபவபூர்வமாக அவர்கள் கண்டது .. உலகெங்கிலிருந்தும் சாய்பாபாவின் ஆசியைப் பெற இன்னும் அவரது கோயிலிற்கு லட்சக்கணக்கானோர் வருகின்றனர் .. ஷீர்டிபாபா பாதம் பணிவோம் .. அவரது பரிபூரண திருவருளைப் பெறுவோமாக .. “ ஓம் சாய் .. ஸ்ரீசாய் ..ஜெய ஜெயசாய் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI ..MAY HE SHOWER YOU VICTORY IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. "OM SAI RAM "

No comments:

Post a Comment