அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று ஏகாதசித் திதியும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று மஹாவிஷ்ணுவை வழிபடுவது சாலச்சிறந்தது .. இன்றைய ஏகாதசியை “ பீம ஏகாதசி என்பர் “ ஏகாதசி விரதத்தை சகலபாவங்களையும் போக்கும் வல்லமை கொண்ட விரதம் என்றும் .. அசுவமேத யாகம் செய்த பலனுக்கு சற்றும் குறையாத அளவு பலன்தரும் விரதம் என்றும் சான்றோர் சொல்வர் .. மஹாவிஷ்ணுவிற்குப் பிடித்தமான திதி ஏகாதசி திதியாகும் .. பதினெட்டு புராணங்களும் ஏகாதசித் திதி விரதத்தைச் சிறப்பாகச் சொல்கின்றன .. நடக்காத காரியங்கள் அனைத்தும் நடக்கவைப்பது ஏகாதசிவிரதம் .. ஒவ்வொருமாதமும் வளர்பிறையில் வரும் பதினோராவது திதியே ஏகாதசி .. ஒருமுறை வியாசரை சந்தித்த தர்மபுத்திரர் அவரை வணங்கி “தவசீலரே” கலியினால் உண்டாகும் துன்பங்களை அகற்ற சுலபமான ஒரு வழியைக் கூறி அருளுங்கள் என்றார் .. எல்லாத்துன்பங்களும் நீங்குவதற்கு ஏகாதசி உபவாசத்தைத் தவிர வேறு வழியேதும் இல்லை .. சகல சாஸ்திரங்களும் கூறுவது இதுவே என்றார் வியாசர் .. அப்போது தருமருடன் வந்த பீமன் முனிசிரேஷ்டரே ! உடன்பிறந்தவர்களும் .. தாயும் .. மனைவியும் நீங்கள் சொன்ன ஏகாதசி விரதத்தைச் செய்கிறார்கள் .. என்னையும் உபவாஸம் இருக்கச் சொல்கிறார்கள் .. ஒருபொழுது இருப்பதே என்னால் முடியாத காரியம் .. அப்படிப்பட்ட நான் எப்படி உபவாஸம் இருப்பேன்? மேலும் என் வயிற்றில் “விருகம்” என்று ஓர் அக்னி இருக்கிறது (இதனால் பீமனுக்கு “விருகோதரனென்றும் பெயர் உண்டு ) திருப்தியாக சாப்பிட்டால் அன்றி அதுஅடங்குவதில்லை வருடத்துக்கு ஒரே ஒருநாள் உபவாஸம் இருக்கமுடியும் அதன்மூலம் எல்லா ஏகாதசிகளின் பலனையும் நான் பெறவேண்டும் .. அப்படிப்பட்ட ஏகாதசியைப் பற்றிச் சொல்லுங்கள் என வேண்டினான் .. வியாசர் “பீமா” ! உனது இந்தக்கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் என்னிடம் சொன்னதையே பதிலாக தருகின்றேன் .. நீ கேட்டபடி ஓர் ஏகாதசி உண்டு அதற்கு “நிர்ஜலா ஏகாதசி” என்று பெயர் .. தண்ணீர் கூடக்குடிக்காமல் அன்று விரதம் இருக்கவேண்டும் .. அதனால் அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது ஆனிமாத வளர்பிறையில் வரும் அந்த ஏகாதசியன்று விரதமிருந்து பெருமாளை வழிபடு இதன்மூலம் எல்லா ஏகாதசிகளிலும் இருந்த பலன் கிடைக்கும் என்றார் வியாசர் .. அப்படியே செய்தான் பீமன் .. இதனால் இந்த ஏகாதசிக்கு “பீம ஏகாதசி” எனப்பெயர் பெற்றது .. பீமன் அன்று முழுவதும் தண்ணீர் கூடக்குடிக்காமல் விரதமிருந்து மறுநாள் துவாதசி அன்று உணவு உட்கொண்டான் .. அதனால் அந்த துவாதசி “பாண்டவ துவாதசி” எனப்பெயர் பெற்றது .. ”சீரும் சிறப்பும் செல்வாக்கும் சீக்கிரம் பெற்றிடவே நாராயணன் உனை துதிக்கின்றோம் .. நலமும் வளமும் தருவாயே “ .. என்று நாராயணனை துதியுங்கள் .. நலம் யாவும் வீடு தேடிவரும் .. ஓம் நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE BLESS YOU WITH POWER AND WISDOM .. "OM NAMO NAARAAYANAA"

No comments:

Post a Comment