PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

அனைவருக்கும் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. அஷ்டமித் திதியாகிய இன்று ‘காவல் தெய்வமான ‘ பைரவரை’ வழிபடுவது விசேஷம் .. கஷ்டங்கள் தீவிரமாகும் போது அவை காற்றில் பறக்கும் பஞ்சாகிவிடும் .. தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும் .. தங்களனைவரது சகல பிரச்சினைகளும் தீர்ந்து மனதில் அமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் .. செல்வவளம் பெருகவும் பைரவரை பிரார்த்திக்கின்றேன் .. ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே! சூலஹஸ்தாய தீமஹி! தந்நோ பைரவ ப்ரசோதயாத்!! .. அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் வரலாறு கூறப்பட்டுள்ளது .. தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் கேட்டான் .. உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன் .. ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் கூறினார் .. அவன் அகங்காரத்துடன் ஒரு பெண்ணைத்தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான் .. பலம்மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம் .. பல அட்டூழியங்கள் செய்த அவனுக்கு அழியும் காலம் வந்தது .. தேவர்கள் சிவ .. பார்வதியிடம் முறையிட்டனர் .. பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து கறைபடிந்த ஒரு சுடரை உருவாக்கினாள் .. அந்தச்சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது .. ‘காளம்’ (விஷம்) படிந்த அந்த பெண்ணுக்கு ‘காளி’ என பெயர் சூட்டினாள் .. காளிதேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள் .. அந்த கோபம் கனலாக வடிவெடுத்து.. சூரனை சுட்டெரித்தது .. பின் அந்த கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி அதற்கு பாலூட்டினாள் .. அதன் பின் சிவபெருமான் காளியையும் அந்தக்குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் .. அப்போது அவரது உடலில் இருந்து எட்டு குழந்தைகள் உருவாகின .. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் அந்த குழந்தைக்கு “ பைரவர் “ என்று பெயர் வைத்தார் .. காளி .. சிவன் .. ஐக்கியத்துடன் எட்டு மடங்கு சக்தியுடன் காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தக் குழந்தை “காளபைரவர்” எனப்பட்டு தற்போது ‘காலபைரவர்’ ஆகியுள்ளது இவரை தம் காவலுக்கு சிவபார்வதி நியமித்தனர் .. தெய்வங்களுக்கு காளை .. சிங்கம் .. யானை .. மயில் போன்ற வாகனங்கள் இருக்க பைரவருக்கு மட்டும் நாய்வாகனம் தரப்பட்டுள்ளது .. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்கவைத்து பிஸ்கட் .. பால் கொடுத்து குழந்தை போல் வளர்ப்பர் .. சிலர் கண்டாலே கல்லெறிவர் .. இதுபோல் வாழ்க்கையில் இன்ப துன்பம் எதுவந்தாலும் அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என வேதங்கள் சொல்கின்றன .. அந்த வேதத்தின் வடிவமாக நாய்வாகனம் கருதப்படுகிறது .. நாய்க்கு “வேதஞாளி” என்ற பெயர் இருக்கிறது .. நவக்கிரக பைரவபெருமான் ராகு கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்தும் .. சந்திரனை சிரசில் வைத்தும் .. சூலம் .. மழு .. பாசம் .. தண்டம் ஏந்தி காட்சி தருகிறார் ..காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கம் .. மேஷராசி - தலையிலும் .. ரிஷபராசி - வாயிலும் .. மிதுனராசி - கைகளிலும் .. கடகராசி - மார்பிலும் .. சிம்மராசி - வயிற்றிலும் .. கன்னிராசி - இடையிலும் .. துலாராசி - புட்டத்திலும் .. விருச்சிகராசி - லிங்கத்திலும் .. தனுசுராசி - தொடையிலும் .. மகரராசி -முழந்தாளில்... கும்பராசியில் - காலின்கீழேயும் .. மீனராசியில் - அடித்தளங்களில் உள்ளதாகவும் சாஸ்திர ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன .. பைரவரை போற்றி தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவர பிரார்த்திக்கின்றேன் .. “ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD BHAIRAWA..

No comments:

Post a Comment