அனைவருக்கும் என் அன்பார்ந்த அதிகாலை வணக்கங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று ஏகாதசி விரதமாகும் .. மாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியை “ ஷட்திலா ஏகாதசி “ என்பர் .. ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் துதித்து தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நாளாகவும் .. அனைத்து காரியங்களும் சித்தி பெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! .. இந்த நாளில் விரதம் மேற்கொள்வோர் எள்ளை ஐந்து விதமாகப் பயன்படுத்துவர் .. 1) எள்ளை அரைத்து உடலில் பூசிக்கொண்டு நீராடுவது 2) எள் தானம் செய்வது 3) எள்ளால் ஹோமம் செய்வது 4) எள்ளுடன் நீரும் சேர்த்து தானம் செய்வது 5) எள் அன்னம் உண்பது பலதர்மங்கள் செய்த பெண்ணொருத்தி இறந்தபின் சொர்க்கம் சென்றாள் .. சொர்க்கத்தில் எல்லா வசதிகளும் அவளுக்குக் கிடைத்தாலும் உணவு மட்டும் கிடைக்கவில்லை .. ஏனெனில் பூவுலகில் இருக்கும்போது அவள் அன்னதானம் செய்யவில்லை .. பின்னர் ஒரு துறவியின் ஆலோசனைப்படி தேவலோகப் பெண்ணொருத்தியின் ”ஷட்திலா ஏகாதசி” விரதப் பலனை இவள் பெற்றாள் .. அதன்பின் அவளுக்கு உணவு கிடைத்தது .. எனவே இந்த விரதத்தைக் கடைப்பிடிப்போருக்கு பசி என்னும் வேதனையே உண்டாகாது.. பெருமாளின் பரிபூரண திருவருளைப் பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வீர்களாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAA " ..

No comments:

Post a Comment