PANVEL BALAGAR
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று மாசிமாத அமாவாசை .. அன்னை அங்காள பரமேஷ்வரிக்கு விசேஷ விழாவாக “ மயானக் கொள்ளை “ எனும் விழா சிறப்பாக நடைபெறும் .. அன்னையைத் துதித்து தங்களனைவருக்கும் அன்னையின் அருட்கடாக்ஷ்ம் கிடைத்து .. அனைத்து காரியங்களிலும் சகலவெற்றிகளையும் அருளுமாறு பிரார்த்திக்கின்றேன் .. ஓம் சக்தி ! ஓம் சக்தி ! ஓம் பராசக்தி ஓம் ! ஓம் சக்தி ! ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் !! மாசி மாத அமாவசை நாளில் அனைத்து அங்காள பரமேஷ்வரி ஆலயங்களிலும் ”மயானக்கொள்ளை விழா” நடைபெறும் .. இவ்விழாவின் அடிப்படை சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான் .. அப்போது பிரம்மாவுக்கும் ஈசனைப்போல ஐந்து தலைகள் இருந்தன .. எனவே சிவனை நாம் ஏன் வணங்க வேண்டும் என்று ஆணவம் கொண்டார் பிரம்மா .. அவரது ஆணவத்தை அழிக்க பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்துவிட்டார் சிவபெருமான் .. அதன் காரணமாக சிவனை ’பிரம்மஹத்தி தோஷம்’ பற்றிக்கொண்டதுடன் கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவபெருமானின் கரத்தில் வந்து அமர்ந்தது .. அதை அவர் கீழே போட்டாலும் மீண்டும் அவர் கரத்துக்கே வந்தது .. இவ்வாறு 99 முறை நடந்தநிலையில் .. “அதைக்கீழே போடாமல் சிறிதுநேரம் கையிலேயே வைத்திருங்கள் “ என்று பார்வதிதேவி சிவனிடம் கூறினாள் .. சிவனும் அவ்வாறே செய்ய .. பிரம்மாவின் தலை கபாலமாகமாறி அவர் கரத்திலேயே ஒட்டிக்கொண்டது .. அதையே பிச்சைப்பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது .. போடப்படும் அனைத்து உணவுகளையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால் உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை .. இந்நிலையில் பிரம்மாவின் தலை கொய்யப்பட்ட வேதனையில் இருந்த சரஸ்வதிதேவி அது கபாலமாக மாறி சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுமாறு உபாயம் கூறிய பார்வதிமீது சினம் கொண்டு கொடிய உருவத்துடன் பூவுலகில் திரிக என சாபமிட்டாள் .. அதன்படி பார்வதிதேவி பூவுலகில் பல தலங்களில் அலைந்து முடிவில் “மலையனூர்” வந்தாள் .. அங்கே “ அங்காள பரமேஷ்வரியாகக் “ கோவில் கொண்டாள் .. அப்போது ஈஸ்வரனும் மலையனூர் வர அங்காள பரமேஷ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள் .. எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட .. அங்குவந்த மஹாலக்ஷ்மி பரமேஷ்வரிக்கு ஒரு உபாயம் கூறினாள் .. அதன்படி பரமேஷ்வரியும் இரண்டு கவளம் உணவை கபாலத்தில் இட்டாள் .. அதைக் கபாலம் உண்டுவிட்டது .. மூன்றாவது கவளத்தைக் கைதவறியது போல கீழே போட்டாள் .. உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம் அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது .. அப்போது அங்காள பரமேஷ்வரி விஸ்வரூபமெடுத்து பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கரத்தை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழத்திவிட்டாள் .. ஈசனைப்பற்றிய பிரம்மஹத்தி தோஷமும் அகன்றது .. இந்த சம்பவத்தின் அடிப்படையில் தான் மயானக்கொள்ளை எனும் விழா கொண்டாடப்படுகின்றது .. மயானக்கொள்ளை என்பது “ நம்பியவர்களைக் காத்து .. இரட்சித்து .. அனைத்து உயிர்களுக்கும் அல்லல் தருவோரை அழிப்பதைக்காட்டும் தத்துவ விழா என்றாலும் மிகையில்லை “ .. அன்னையைப் போற்றுவோம் .. அவளன்பைப் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ... WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS SHAKTHI .. MAY SHE SHOWER YOU YOU WITH HAPPINESS AND GOOD HEALTH .. AND PROSPERITY .. " OM SHAKTHI "
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment