தானத்தின் பலன்கள் ஒருவர் கொடுக்கும் சிலவகை தானங்களால் மறு பிறவியில் அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் கூறப்பட்டுள்ளது. அவற்றை இங்கு பார்க்கலாம். * திருக்கோவில்களை புனரமைப்பதற்கு உதவி செய்வதால், பூரண ஆரோக்கியம், உத்தமியான மனைவி, நற்குணம் நிறைந்த குழந்தைகள் கிடைப்பார்கள். * தங்கத்தை தானமாக வழங்குவதால், குறைவில்லாத ஐஸ்வரியம் உண்டாகும். * வெள்ளியை தானம் செய்வதால் அழகான சரீரம் கிடைக்கப்பெறுவர். * எள் தானம் செய்வதன் மூலம் பித்ருக்களின் ஆசி, சந்தான பாக்கியம், சந்ததி விருத்தி போன்ற நலன்கள் கிட்டும். * தானியங்களை தானம் செய்தால், குறைவில்லாத அன்னம் கிடைக்கும். * கோமாதா தானம் செய்வதால் உத்தமமான குடும்பத்தின் பிறப்பு, தாயன்பு வந்தடையும். * பிராணிகளின் தாகம், பசியை போக்கினால் நோயற்ற வாழ்வு வந்து சேரும்.

No comments:

Post a Comment