அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையான இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாய் அமைந்திடவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றிபெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. “ ஓம் நமசிவாய “ போற்றியோம் நமசிவாய புயங்களே மயங்குகின்றேன் .. போற்றியே நமசிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை .. போற்றியோ நமசிவாய புறம் எனைப் போக்கல் கண்டாய் .. போற்றியோ நமசிவாய ! ஜெய ஜெய போற்றி ! போற்றி ! சிவனை நாம் வணங்கும் போது “ ஓம் சிவாய நம “ என்ற மந்திரத்தை ஓதி வணங்குகின்றோம் .. இம்மந்திரம் பல பெரிய தத்துவங்களை உணர்த்துகிறது .. இதில் உள்ள - சி - எனும் எழுத்து சிவனையும் .. வா - எனும் எழுத்து அம்பாளையும் .. ய - எனும் எழுத்து மனிதர்களையும் .. நம - எனும் சொல் மும்மலங்களான மாயை .. ஆணவம் .. மற்றும் கர்வத்தையும் குறிக்கிறது .. மனிதன் இம்மந்திரத்தைச் சொல்லி இறைவனையும் இறைவியையும் வேண்டும்போது கர்வம் .. ஆணவம் .. மற்றும் உலக மாயையிலிருந்து (ஆசை) விடுபடலாம் என்பர் .. சிவனைப்போற்றுவோம் அவரது திருவருளைப் பெறுவோமாக வாழ்க வளமுடனும் நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH EVERY SUCCESS IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. " OM NAMASHIVAAYA " ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment