PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவருக்கும் சகல கிரகதோஷங்களும் நீங்கி புத்துணர்வு பெற்று . மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. “ ஓம் சிவாய நமஹ “ .. சிவன் கழுத்தில் பாம்பு இருப்பது ஏன் ? பாம்பின் குணத்தை யாரும் அறியார் .. எப்போது சீறும் .. எப்போது சினேகமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளமுடியாது .. ஆகவே தான் ஜோதிடத்தில் கூட ராகு கேது திசைகள் பாம்பின் குணத்தை ஒத்திருக்கும் .. யாருக்கும் கட்டுப்படாத நாகம் இறைசக்திக்கு மட்டுமே கட்டுப்பட்டுள்ளது என்பதை நமக்கு உணர்த்தவே சிவன் கழுத்தில் பாம்பு இருக்கின்றது .. இன்னொரு தத்துவமும் இருக்கின்றது - மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியாகிய சிவம் ஒரு அசைவற்ற பாம்பைப்போல உறங்கிக்கொண்டிருக்கிறது .. இதை எழுப்பி முதுகுத்தண்டின் வழியே தலையில் இருக்கும் சக்தியோடு சிவம் சேரும்போது அளப்பரிய ஞானம் உண்டாகும் ஒருவனுக்கு எட்டு சித்திகளும் கிடைக்கும் .. இந்த தத்துவத்தை விளக்கவே குண்டலினி சக்தியாகிய பாம்பை தன் கழுத்தில் அணிந்திருக்கிறார் .. சிவனைப்போற்றுவோம் அவரது திருவருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவோம் ! எல்லாம் இனிதே நிறைவேறும் ! வெற்றி நிச்சயம் !! .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM SHIVAAYA NAMAHA "

No comments:

Post a Comment