அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று அனைவராலும் போற்றி வணங்கப்படும் குருநாதர் ஷீரடி சாய்நாதரின் தினமும் ஆகும் .. அவரது பாதம் பணிந்து தங்களனைவருக்கும் அவரது அன்பும் .. பூரண திருவருளும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் ஸாயி ! ஸ்ரீ ஸாயி ! ஜெய ஜெய ஸாயி !! .. ஒவ்வொரு மனிதனும் கடவுளை அடைவதற்கு முயற்சி செய்கிறான் .. அப்போது மனிதன் பல கட்டங்களை தாண்டிச் செல்கின்றான் .. மனிதன் உலகத்துப் பொருளின் மீது வைத்திருந்த ஆசையை அடக்கும் போது அவன் முக்திபெறுகிறான் .. மனிதன் பந்தபாசத்தை தவிர்க்கும்போது அவன் விரக்தி அடைகிறான் .. மனிதன் ஆத்மாவை அறிந்துகொள்ளும்போது அவன் தன்னைப் புரிந்து கொள்கின்றான் .. மனிதன் உணர்வுகளைத் துறக்கும்போது அவன் விசர்ஜனம் பெறுகிறான் .. மனிதன் உண்மையை நேசிக்கும்போது அவன் தர்மத்தை கடைப்பிடிக்கிறான் .. மனிதன் மற்றவங்களுக்காக வாழும்போது அவன் முதிர்ந்த மனப்பக்குவத்தை அடைகின்றான் மனிதன் உடலையும் உள்ளத்தையும் அடக்கும்போது அவன் தியானத்திலிருக்கின்றான் மனிதன் தூய எண்ணத்தோடு செயல்படும்போது அவன் அமைதியை நாடுகிறான் .. மனிதன் அமைதியான நிலையில் கடவுளை அடைவதற்கு ஒரு நல்ல குருவைத் தேடுகிறான் .. நல்ல குரு கிடைத்தவுடன் அவன் விவேகத்தைப் பெற்று கடவுளோடு இணைகிறான் - ( ஷீரடி பாபா அருளியவை ) பாபாவைத் துதிப்போம் அவரது அன்பும் ஆசியும் பெறுவோமாக ...” ஓம் சாய் ராம் ” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. ' OM SAI RAM ' ..

No comments:

Post a Comment