அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. தைப்பூசத்திருநாள் நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக .... தைப்பூச நன்னாளில் அதிகாலையில் கிழக்கில் சூரியனும் .. மேற்கில் முழுநிலவும் .. ஞானசபையில் இருந்து அக்னியான ஜோதியும் காண்பிக்கப்படும் ..இவை ஒரே நேர்கோட்டில் அமையும் .. இந்த அதிசயம் தைப்பூசத்தில் மட்டுமே நிகழும் .. சந்திரன் என்பது மன அறிவு .. சூரியன் என்பது ஜீவ அறிவு .. அக்னி என்பது ஆன்மா அறிவு .. சந்திரன் சூரியனில் அடங்கி .. சுரியன் அக்னியில் அடங்கி .. அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தைபூசம் .. மனம் ஜீவனில் அடங்கி .. ஜீவன் ஆன்மாவில் அடங்கி .. ஆன்மா சிவத்துடன் கலந்துவிடும் என்பதைக் காட்டவே தைபூசம் நமது வள்ளல்பெருமானால் அளிக்கப்பட்டது .. மேலும் அதிகாலை ஜோதிதரிசனம் மட்டுமே உண்மைத் தத்துவமாக வள்ளல் பெருமானால் விளக்கப்பட்டது .. சூரனை வதம் செய்வதற்காக தன் அன்னை சக்தியிடம் பிரார்த்தனை செய்த முருகனுக்கு தன் ஞானசக்தியால் அதிசயம் அநேகமுற்ற பழனிமலையில் வேல் வழங்கி ஆசி வழங்கினாள் .. அதன் காரணமாகவே பழனிமலையில் தைப்பூசத்திருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது .. முருகனையும் .. ஜோதியையும் (வேல்) எப்போதும் பிரிக்கமுடியாது .. ஞானத்தின் அம்சம்தான் வேல் .. அந்த வேலைத்தாங்குகின்ற முருகப்பெருமானை “ஞானவேல் முருகன்” என்று போற்றுகின்றன ஆகமங்கள் .. தைப்பூசத்தன்று முருகனை வழிபட்டு அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து .. சகலசௌபாக்கியங்களும் பெறுவீர்களாக .. “சரணம் சரணம் சரவணபவனே சரணம் ! சரணம் சரணம் சண்முகா சரணம் !! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .... WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER HIS BLESSINGS WITH GOOD HEALTH AND PROSPERITY .. " OM MURUGA " ..

No comments:

Post a Comment