அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. ஸ்ரீராமநவமி வாழ்த்துக்களும் உரித்தாகுக .. மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரமாகும் .. அறமே வாழ்வின் ஆன்மீக ஜோதி .. அறத்தை வளர்ப்பதற்கும் .. மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமான் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார் .. ஸ்ரீராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம் ! நல்ல திவ்யமுகச்சந்திரனுக்கு சுபமங்களம் ! மாராபிராமனுக்கு ! மனுபரந்தாமனுக்கு !ஈராறு நாமனுக்கு ! ரவிகுலசோமனுக்கு ஜெயமங்களம் !! ராமன் பிறந்தகாலத்தில் ஐந்து கிரகங்கள் மிகவும் உச்சநிலையில் இருந்தது .. அதனால் அவருடைய ஜாதகத்தை எழுதி அதை பூஜைஅறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதகரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரக தோஷம் நீங்கும் .. வியாதிகளும் குணமாகும் .. ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை .. ஒருவில் ! ஒருசொல் ! ஒரு இல் ! என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர் பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார் .. அன்றைய தினமே “ ஸ்ரீராமநவமியாக “ கொண்டாடப்படுகிறது .. ராமநாமமானது அஷ்டாட்சரமான ‘ ஓம் நமோ நாராயணாய ‘ என்பதில் உள்ள “ ரா “ என்ற எழுத்தையும் .. பஞ்சாட்சரமான ’ நமசிவாய ‘ என்ற எழுத்தில் “ ம” என்ற எழுத்தையும் சேர்த்து ” ராம “ என்றானது .. ‘ஆயிரம் நாமங்களுடைய தத்துவங்களையும் ராம என்ற நாமம் கொண்டுள்ளது .. எனவே ஒருவன் ராமநாமத்தை மூன்றுமுறை ஜபிப்பதால் அந்த ஆயிரம் நாமங்களையும் ஜபித்தவன் ஆகிறான் ‘ .. ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ! ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே ! என்று ராமநாமத்தை பார்வதிதேவியிடம் சொல்லிக் கொண்டாடுபவர் சாட்சாத் சிவபெருமானே ! கிருஷ்ணாவதாரத்தில் என்ன நடக்கும் என்பது கிருஷ்ணருக்குத் தெரியும் .. ராம அவதாரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது மானுட அவதாரம் எடுத்த ராமனுக்குத் தெரியாது .. அதுதான் இந்த அவதாரத்தின் மகிமை .. ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று பொருள் .. சுகதுக்கங்களில் சலனம் அடையாமல் தான் ஆனந்தமாகவே இருந்துகொண்டு மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருபவன் தான் ஸ்ரீராமன் .. ” ஸ்ரீராமஜெயம் “ என்ற எழுத்தை 108 முறை .. அல்லது 1008 முறை எழுதத் தொடங்கவும் .. இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழியும் .. மனதில் அமைதியும் .. மகிழ்ச்சியும் விளையும் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும்.. “ ஜெய் ராம் “ . MAY YOUR SOUL BRIGHTEN UP WITH JOY AND YOUR HOME LIGHTEN UP WITH DIVINE BLESSINGS ON " RAM NAVAMI " AND ALWAYS .. MAY LORD RAM BLESS YOU AND YOUR FAMILY TOO ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment