அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியபகவானின் ஆதிக்கம் பூமியில் நிறைந்த நாளாகும் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாகவும் .. உடல்நலமும் .. மனநலமும் ஆரோக்கியத்துடன் திகழ சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. அஸ்வத்வஜாய வித்மஹே ! பத்மஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூர்யப்ரசோதயாத் !! ஸ்ரீ சூரியபகவான் ஸ்தோத்திரம் - காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி .. எங்கும் பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும் வாசியேழுடைய தேர்மேல் மகாகிரிவலமாய் வந்த தேசிகா! எமை ரட்சிப்பாய் ! செங்கதிரவனே ! போற்றி ! போற்றி ! .. சூரியனை வழிபடுவதால் உலகில் அடையமுடியாதவையே இல்லை .. சூரியன் ஆன்மாவைத் தட்டி எழுப்பி தன்வழிப்படுத்துபவர் என்பதையே வேதம் புகழ்கிறது .. உடலாரோக்கியத்தை அளிப்பதிலும் அருட்கடல் .. இதயநோயை நீக்குபவர் என்பதை குறிப்பிடுகிறது .. இவரே மழைபெய்யக் காரணம் .. மகாபாரதத்தில் திரௌபதிக்கு அட்சயபாத்திரம் அளித்ததும் கதிரவனே ! சூரிய வழிபாடு செய்து கிரகதோஷங்கள் நீங்கி .. எல்லாவளமும் பெறுவோமாக .. நம் மன இருளைப்போக்கி .. ஆரோக்கிய வாழ்வையும் தரும் சூரியபகவானை வணங்குவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSING AND GUIDANCE OF LORD SURYA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " JAI SURYA DEV " ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment