அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. ஹோலிப்பண்டிகை வாழ்த்துக்களும் .. இன்று ‘ஹோலிப் பண்டிகையாகும்’ .. இந்துக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஹோலியும் ஒன்று .. இந்த ஹோலி பண்டிகை பெரும்பாலும் வட இந்தியாவில்தான் கொண்டாடப்படுகின்றது .. பனிகாலத்திற்கு விடையளித்து வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் ஒரு பண்டிகை ஆகும் .. விவசாயிகள் அறுவடை முடித்து நிறைந்த மனதுடன் இதை கொண்டாடுவர் .. இந்த பண்டிகையின் சிறப்பு என்னவென்றால் ஒருவர்மீது ஒருவர் வண்ணப்பொடிகளாலோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு விளையாடுவது தான் .. வண்ணப்பொடிகள் படாமல் இருக்க பலரும் முயற்சிப்பர் .. இருப்பினும் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு தான் அதிகம் .. ஹோலிபண்டிகை கொண்டாடும் விதம் - கிருஷ்ணபகவான் தன் குழந்தைபருவத்திலும் .. பால்யபருவத்திலும் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலிபண்டிகை .. இப்பொழுதும் ஹோலிப்பாடல்களில் கிருஷ்ணரின் குறும்புகளை விவரித்து பாடுவர் .. இந்த பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது .. ஹோலி பண்டிகையின் புராணம் - இரணியன் என்னும் அரக்கன் தன்னையே எல்லோரும் கடவுள் எனத் தொழவேண்டும் என்று எண்ணினான் .. இரணியனின் மகன் பிரஹலாதன் அதை எதிர்த்தான் .. பிரஹலாதன் மஹாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றிப் பூஜித்து வந்தான் .. இதையறிந்த இரணியன் மகனென்றும் பாராமல் பிரஹலாதனை பலவகையில் துன்புறுத்தி தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான் .. இதற்கு ஒருவழிகாண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான் .. ஹோலிகா நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள் .. எனவே தன் மகன் பிரஹலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன் பிரஹலாதனை தன்மடியில் அமர்த்திக்கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான் .. இதனால் பிரஹலாதன் நெருப்பில் எரிந்துவிடுவான் என்றும் இரணியன் நினைத்தான் .. ஆனால் மஹாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரஹலாதன் .. மஹாவிஷ்ணுவின் கருணையால் பிரஹலாதன் நெருப்பிலிருந்து மீண்டான் .. ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள் .. இதைக் குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்டவெளியில் தீயைமூட்டி அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர் .. ஹோலிகா அழிந்த தினத்தை “ஹோலி” என்று கொண்டாடுகின்றனர் .. தங்களனைவருக்கும் இன்றைய தினம் ஓர் மகிழ்ச்சிகரமான தினமாய் அமைந்திட இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . WISH YOU ALL A HAPPY AND A COLORFUL HOLI .. MAY GOD BLESS YOU AND SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment