PANVEL BALAGAR
அனைவருக்கும் என் அன்பான காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று மங்களங்கள் மலரும் பொன்னாள் .. பங்குனி உத்தரமும் சேர்ந்து வருவதே சிறப்பு .. ஆலயம் சென்று அனைத்து தெய்வங்களையும் ஒன்றாக தரிசித்து சகல சௌபாக்கியங்களும் பெற்று .. மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திக்கின்றேன் .. பங்குனி உத்தர சிறப்புகள் - பால்போலவே வான்மீதிலே சந்திரன் பௌர்ணமி நாளில் கூட சிறுகளங்கத்துடன் தான் ஒளிதருவான் .. ஆனால் பங்குனி மாதத்தில் பூமி மீனராசியில் இருப்பதால் உத்திர நட்சத்துரத்துடன் சேர்ந்து ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று முழுகலையையும் பெற்று பூமிக்கு ஒளிவழங்குவான் .. அந்த பூரணபௌர்ணமி நிலவில் களங்கத்தைக் காணமுடியாது களங்கமில்லாத சந்திரனொளி உடலுக்கும் .. மனதுக்கும் நிம்மதிதரும் .. பலநற்பலன்களையும் கொடுக்கும் .. எனவே இந்தநாள் கூடுதல் பலன்களைத் தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது .. சைவக்கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரததினமாகக் கொண்டாடப்படுகிறது .. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும் .. தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி .. நட்சத்திரங்களில் .. 12ம் நட்சத்திரம் உத்தரம் .. எனவே 12 கை வேலவனுக்கும் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது .. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும் .. பல தெய்வத்திருமணங்கள் நிகழ்ந்த பங்குனி உத்திரத் திருநாள் கல்யாண விரதமென்றே சிறப்பிக்கப்படுகிறது .. மதுரையில் சொக்கநாதர் மீனாட்சிக்கு மாங்கல்யதாரணம் செய்த பொன்னாள் பங்குனி உத்தரம் .. அன்னை தாட்சாயிணிதேவி .. மலையரசன் இமயவானின் மகளாகப் பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள் .. இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது பங்குனி உத்திரத்திருநாள் .. மதுரையில் சொக்கநாதருக்கு மீனாட்சி மாலையிட்ட நன்னாள் ஜனகனின் வில்லை ஒடித்து ஜானகியை மணந்த ராமர் .. சீதா ராமனானார் .. லக்ஷ்மணன் .. சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது .. முழுமுதற் பொருளான விநாயகருக்கு அம்மையப்பனான உமாமகேஸ்வரர் சித்தி .. புத்தி எனும் இருவரை திருமணம் செய்வித்து உளம் மகிழ்ந்தார்கள் .. சந்திரபகவான் கார்த்திகை .. ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம் .. மஹாலக்ஷ்மி விரதமிருந்து மஹாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தநாள் .. பிரம்மன் தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார் .. இந்திராணி இந்திரபதிக்கு கிடைத்த பொன்னாள் .. திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானை திருமணம் நடந்தது .. ஆண்டாள் ரங்கமன்னார் திருமணம் நடந்தது .. பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது .. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து விரதமிருப்பர் .. பகற்பொழுது உணவு உட்கொள்ளாது இரவில் பால் .. பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு விரதம் அனுஷ்டிப்பர் .. இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்பர் .. உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன் .. இந்நாளில் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறுகிறது .. அனைவரையும் போற்றி வணங்குவோம் .. அனைத்தும் பெற்று மகிழ்வோம் .. ஓம் நமசிவாய .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED DAY WITH THE BLESSINGS OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. BEST WEALTH AND HAPPINESS ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment