அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமும் சேர்ந்து வருகின்றது .. மாலையில் பிரதோஷ வேளையில் (4.30 மணிமுதல் 6.00 மணிவரை ) சிவாலயம் சென்று நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கிடையே சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தை தரிசிப்பது நம் அனைத்து துன்பங்களும் நீங்கி இன்பத்தை அடையும் வழியே .. தங்களுக்கும் அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்வில் அனைத்து நலன்களும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! பிரதோஷ வரலாறும் .. மகிமையும் .. அகிலாண்டேஸ்வரி ஒருமுறை தேவலோக கன்னிகை ஒருத்திக்கு அவளது நடனத்தை மெச்சும் வண்ணம் தனது கழுத்தில் இருந்த மலர்மாலையை பரிசாகத் தர .. கன்னிகையோ அதனை எதிரில் வந்துகொண்டிருந்த துர்வாசமுனிவரிடம் கொடுத்துச் சென்றாள் .. தேவலோகம் சென்ற துர்வாசர் அம்மாலையை இந்திரனுக்கு பரிசளிக்க .. மாலையின் மகிமையை அறியாத இந்திரன் அம்மாலையை தனது யானையிடம் தர .. யானை மாலையை தனது கால்களால் மிதித்து சிதைத்தது .. கோபத்திற்கு பெயர் பெற்றவராயிற்றே துர்வாசர் .. இந்திரனையும் .. தேவர்களையும் .. ஒருசேர சபித்தார் .. சாபவிமோச்சனம் பெறவேண்டி தேவரும் ..இந்திரனும் ..பரந்தாமனை வேண்டினர் .. மனம் இளகிய பரந்தாமனும் திருப்பாற்கடலை கடைந்து அதிலிருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்துமாறு கூறினார் .. மந்திரகிரி மலையை மத்தாகவும் .. வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாம்பின் தலைப்பகுதியை அசுரரும் .. வால்பகுதியை தேவர்களும் பிடித்து கடையத் தொடங்கினர் .. மலை சாய்ந்தது உடனே மஹாவிஷ்ணு ‘ கூர்ம அவதாரம்’ எடுத்து மலையைத் தாங்கிப்பிடித்தார் .. மேலும் கடையும்பொழுது வாசுகி வலிதாங்காமல் விஷம்கக்க அப்பொழுது கடலிலும் நஞ்சுதோன்ற இரண்டும் சேர்ந்து “ஆலகாலம்” என்ற கடுமையான விஷமானது .. இதைக்கண்ட வானவர் அஞ்சி நடுங்க திருமாலும் நான்முகனும் அவர்களை கயிலை சென்று பரமனிடம் தஞ்சமடையுமாறு சொன்னார்கள் வானவரும் அவ்வாறே செய்ய கயிலைநாதன் தனது தொண்டனான சுந்தரனை அழைத்து அந்த ஆலகால விஷத்தை எடுத்துவரச் சொன்னார் .. யாராலும் அணுகமுடியாத அந்த விஷத்தை சுந்தரன் நாவல்பழம்போல் உருட்டி எடுத்துவர முக்கண்ணன் அதனை எல்லோரையும் காக்கும் பொருட்டு தனது வாயில் இட .. பரமன் உண்டால் பெரும்கேடு விழையுமே என அஞ்சிய உமையாள் பரமனின் கண்டத்தில் தனது கைகொண்டு தடுக்க விஷமானது சிவனின் கண்டத்திலேயே தங்கி சிவனாரது கழுத்து நீலநிறமானது .. பெருமானும் “நீலகண்டரானார் “ .. இது நடந்தது ஏகாதசி அன்று மாலைபொழுதில் .. பின்னர் தேவர் சிவனின் கூற்றுப்படி பாற்கடலை மீண்டும் கடைந்தனர் .. மறுநாளான துவாதசி திதியன்று பாற்கடலில் அமிர்தம் தோன்ற தேவர்கள் அதனை உண்டு சாகாவரத்தை திரும்ப பெற்றனர் .. ஆனால் சிவனை மறந்தனர் .. பின்னர் பிரம்மதேவர் தேவர்களின் குற்றத்தை உணர்த்த தேவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கயிலை அடைந்து நாதனை மன்னித்தருள வேண்டினர் .. சிவபெருமானும் மனம்கனிந்து தனக்கு முன்னால் இருந்த ரிஷபவாகனத்தின் இருகொம்புகளுக்கு இடையில் அம்பிகை காண திருநடனம் புரிந்தார் .. அனைவரும் அதைக்கண்டு களித்து பெருமானை வணங்கினர் இதுநடந்தது திரயோதசி திதியன்று மாலைவேளையில் .. இதுவே பிரதோஷகாலம் என வழிபடப்படுகிறது .. (மாலை 4.30 - 6.00 மணிவரை ) பிரதோஷ பூஜை சிவபெருமானுக்கு மட்டுமே உரிய பூஜை .. சிவபெருமானை விஷ்ணு .. பிரம்மன் முதலிய அனைத்து தெய்வங்களும் வழிபடும் நேரம் .. எனவே இக்காலங்களில் வேறு எந்த கடவுளருக்கும் பூஜைகள் நடைபெறாது .. சிவாலயங்களில் உள்ள மற்ற கடவுளரின் நடைகள் சார்த்தப்பட்டிருக்கும் .. அல்லது திரையிடப்பட்டிருக்கும் .. சிவனைத் துதித்து அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெறுவோமாக .. “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE BLESS YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment