அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவருக்கும் அனைத்து ஐஸ்வர்யங்களும் பெற்று .. மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாகத் திகழ பிரார்த்திக்கின்றேன் .. ஓம் சிவாய நமஹ ! ஓம் ஸ்ரீசிவ சித்தாய நமஹ ! ஓம் ஸ்ரீமஹா வேதாய நமஹ ! ஓம் சித்தேஸ்வராய நமஹ !! என்னில் யாரும் எமக்கு இனியாரில்லை .. என்னிலும் இனியான் ஒருவன் உளன் .. என்னுள்ளே உயிர்ப்பாய் புறம்போந்து புக்கு என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே உன்கிறார் .. ” யோகம் மூலம் என்னை அடையலாம் .. என்னிடமிருந்து பிரிந்த சக்தியை மீண்டும் அடையவே யோகமிருக்கிறேன் ” என்கிறார் சிவபெருமான் .. மனதை திடப்படுத்துவது எதுவோ அதுவே மந்திரம் எனப்படும் உரு (எண்ணிக்கை) ஏற திரு ஏறும் என திருமூலர் மந்திரத்தை ஜபிப்பதால் கிடைக்கும் நன்மையைப் பற்றிக் கூறுகிறார் .. திரு என்றால் பிரகாசமான என்று அர்த்தம் .. எல்லோரையும் கவரும் காந்தசக்தி என்றும் கூறலாம் .. “வாழ்க வளமுடன் “ என்பதும் ஒரு சக்திவாய்ந்த மந்திரமே ! நாம் சாதாரணமாக பேசும் வார்த்தைகளுக்கும் சக்தி உண்டு .. அதைவிட திருமந்திரம் .. பெரியபுராணம் .. கந்தசஷ்டிகவசம் .. கந்தரலங்காரம் .. திருப்பாவை முதலான தமிழ் ஆன்மீகப் படைப்புகளுக்கு நாம் அவற்றை பாடும்போதும் .. மனதிற்குள் ஜபிக்கும்போதும் சக்தி அதிகம் .. இதற்குச் சமமானசக்தி கொண்டவையே சமஸ்கிருத மந்திரங்கள் .. அவற்றின் பெரும்பாலான மந்திரங்களுக்கு அர்த்தம் கிடையாது .. ஆனால் அவற்றை முறையாக உச்சரிக்கும் போது அது மனித நலத்தை அதிகப்படுத்துகிறது .. இது தொடர்பாக ஒலியியல் .. விஞ்ஞானம் என்ற புதிய அறிவியல்துறை உருவாக்கப்பட்டு இந்துக்களின் வேதமந்திரங்களுக்கு மனித கஷ்டங்களை நீக்கும் அல்லது மாற்றும் வலிமை உண்டு என கண்டறியப்பட்டுவிட்டது .. சிவனைப் போற்றுவோம் .. அவரது திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் பெற்று வளமுடனும் .. நலமுடனும் ..வாழ்வீர்களாக .. “ ஓம் நமசிவாய “ .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY THIS DAY WILL BE THE BEST OF ALL .. " OM NAMASHIVAAYA " ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment