அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று அனைவராலும் வணங்கப்படும் குருநாதர் ஷீரடி பாபாவினதும் நாளாகும் .. ஸாயினாதரை வணங்கி அனைவரும் மன அமைதி பெற்றிடுவோமாக .. ஓம் ஷீரடிவாஸாய வித்மஹே ! சச்சிதானந்தாய தீமஹி ! தந்நோ சாய் ப்ரசோதயாத் !! பாபாவின் பொன்மொழிகள் - மழைக்காலத்தில் கடல் .. ஆறுகளுடன் கலப்பதுபோல் பக்தர்களுடன் பாபா ஒன்றாகி அவர்களுக்குத் தம் ஆற்றலையும் .. அந்தஸ்த்தையும் அளிக்கிறார் .. அஹங்காரமின்மையே என்வடிவம் .. என் தத்துவம் .. என் உதவியை வேண்டுபவர்கள் அஹங்காரமற்றவர்களாக இருக்கவேண்டும் .. வேற்று மனிதர்களின் பேச்சால் உமது நம்பிக்கை குலைந்தது .. எத்தகைய துன்பம் அளிக்கிறது என்பது பற்றி யோசிக்காதீர் .. பாபாவின் சரணங்களில் உமது உள்ளத்தை நிலைநிறுத்தும் அப்போது பாபா உமக்கு சாந்தி அளிப்பாராக .. எப்போதும் நல்லதையே எண்ணி செயல்படுகிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும் .. அன்பு உள்ளத்தில் ஊற்றெடுக்கவேண்டும் .. எங்கும் எதிலும் கடவுளின் அருட்காட்சியைக் காணமுயலவேண்டும் .. நாம் முன்னேறுவதற்காகவே இப்பூமியில் பிறந்திருக்கிறோம் .. ஒவ்வொரு நிமிடமும் நாம் முன்னேறாவிட்டால் வாழ்க்கையே சுவாரஸ்யமற்றதாகிவிடும் .. எந்நிலையிலும் நாம் கடவுளிடம் உதவியைப்பெற கற்றுக்கொள்ளவேண்டும் .. அது பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டேயிருக்கும் .. நமது தேவைகள் அனைத்தையும் கடவுள் நிறைவேற்றுவார் .. நமது பலவீனத்தைப் போக்கி நல்வழிப்படுத்தும் ஆற்றல் கடவுளுக்கு மட்டுமே உள்ளது .. எனவே நமது கடவுளான ஸத்குருவினை நமக்கு எல்லாமுமான ஸாயிநாதனை மனதார பிரார்த்திப்போம் .. சகலவெற்றிகளையும் அடைவோமாக .. ”ஓம் சாய் ராம்” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS OF SHIRDI SAI .. MAY HE SHOWER YOU WITH HAPPINESS AND GOOD LUCK .. " OM SAI RAM " ..

No comments:

Post a Comment