சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று ‘ சதுர்த்தி ‘ திதியும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று விநாயகரைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிமையான நன்னாளாக அமைந்திடவும் .. சகல இன்னல்களும் தீர்ந்து மகிழ்ச்சியுடன் திழைக்கவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!

சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்த நாளாகும் .. வளர்பிறை சதுர்த்தியாகிய இன்றைய சதுர்த்தி விரதம் 
‘வர சதுர்த்தி ‘ என்றும் .. சுக்லபட்ச சதுர்த்தி என்றும் அழைப்பர் 
இதன் வழிபாடுகளை மதியநேரத்தில் செய்வது நல்லது ..
இதற்கு எல்லா வரமும் தரும் சதுர்த்தி என்றழைப்பர் .. 

விநாயகருக்கு உகந்தது மோதகம் என்ற கொழுக்கட்டை ..
பிரம்மம் எப்படி சர்வவியாபியாக விளங்குகிறதோ அப்படி எங்கும் வியாபியாக விளங்குகிறார் .. அப்படிப்பட்ட விநாயகர் 
தன் இல்லம் வரும் நாளினை குறிப்பினால் அருந்ததி அறிந்து கொண்டாள் .. 

பிரம்மம் இந்த கண்டத்தில் எங்கும் நிறைந்திருக்கின்றதை உணர்த்தவே விரும்பினாள் .. அண்டம் என்ற பொருள் 
பூர்ணமாக நிறைந்திருக்கிறது என்ற பொருளின் உள்ளே 
அமிர்தமயமான பூர்ணத்தை வைத்து அதை தன் இல்லம் வந்த 
விநாயகருக்கு படைத்தாராம் .. விநாயகரும் அதனை ஏற்று 
அருந்ததி .. வசிஷ்டர் தம்பதியருக்கு நல்வரங்களையும் அளித்தாராம் .. அந்த தத்துவம் நிறைந்த மோதகத்தை உலகோர் காண ஸ்ரீகணேசன் எப்போதும் தன் கையில் அதனை 
வைத்துக்கொண்டிருக்கிறார் .. 

கணபதியைப் போற்றுவோம் ! இன்னல்கள் யாவும் களைந்து .. அவரது அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோம் .. 
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANESH ..
MAY ALL YOUR PRAYERS BE ANSWERED ON THIS DAY AND BLESS YOU WITH HAPPINESS .. GOOD FORTUNE .. AND PROSPERITY .. 



Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam

 
"JAI GANESH " ..

No comments:

Post a Comment