சுவாமி சரணம்!! பன்வேல் பாலகன் சரணம் போற்றி!! குருவே சரணம்!!!



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய் ஆதிக்கம் நிறைந்தநாளாகிய இன்று கலியுகவரதனாகிய கார்த்திகேயனுக்குரிய நாளாகும் .. தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் இனிய நன்னாளாகவும் .. மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாகத் திகழவும் முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் பிரசோதயாத் !! 

செவ்வாய் ஸ்தோத்திரம் -
சிறப்புறு மணியே ! செவ்வாய்த் தேவே !
குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ ! 
மங்கள செவ்வாய் மலரடி போற்றி !
அங்காரகனே ! அவதிகள் நீக்கு !! 

அக்கினி .. இந்திரன் .. வருணன் .. பிரகஸ்பதி .. ஹிரண்ய கர்ப்பம் ..ஆகியோரின் கூட்டுக்கலவையே முருகன் ஆவான் ..
அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும் 
சதமதபிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான் .. 

தொல்லை வினை தீர்த்துவைக்கும் கந்தன் கருணைக்கு நிகரே இல்லை .. நம்பியோரை ஒருபோதும் கைவிடமாட்டான் .. முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் கலியுகவரதன் முருகனின் அருள்பெற்று வாழ ! அவனருளையே நாடிநிற்போமாக ! ஓம் சரவணபவாய நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..

WISH YOU ALL A BLESSED MORNING WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH 
GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM MURUGA " ..
SWAMIYEE SARANAM IYYAPPA...  IYYANE SARANAM  SARANAM!!

No comments:

Post a Comment